நாடு முழுவதும் 14 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதி மாற்றப்பட்டதற்கு சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தேர்தலில் தோல்வியைத் தவிர்ப்பதற்காக தேர்தல் தேதி மாற்றப்பட்டுள்ளதாகவும், அரசியலில் இது பழைய தந்திரம் எனவும் அவர் விமர்சித்துள்ளார்.
நவ.13இல் தேர்தல் நடைபெறுவதாக இருந்த நிலையில், விழாக்களைக் காரணம் காட்டி நவ.20க்கு தேர்தல் ஆணையம் வாக்குப்பதிவை ஒத்திவைத்துள்ளது.