வயநாட்டில் ராகுல், பிரியங்கா இன்று பிரச்சாரம்

Viduthalai
2 Min Read

திருவனந்தபுரம், நவ.3 கடந்த மக்களவைத் தேர்த லின் போது காங்கிரஸ் மேனாள் தலைவர் ராகுல் காந்தி கேரளாவின் வயநாடு, உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி தொகுதிகளில் போட்டியிட்டார். இரு தொகுதிகளிலும் அவர் வெற்றி பெற்றார்.
இறுதியில் வயநாடு தொகுதி மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து விலகினர். அந்த தொகுதிக்கு வரும் நவ.13-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. ராகுல் காந்தியின் தங்கையும் காங்கிரஸ் பொதுச் செயலாளருமான பிரியங்கா காந்திவயநாடு தொகுதியில் போட்டியிடுகிறார்.
கடந்த மாதம் 23-ஆம் தேதி பிரியங்கா காந்தி வயநாடு தொகுதியில் தீவிர பிரச்சாரம் செய்தார். அப்போது அவருக்கு ஆதரவாக ராகுல் காந்தியும் பிரச்சாரத்தில் பங்கேற்றார்.

இந்த சூழலில் பிரியங்காவும் ராகுலும் இன்று மீண்டும் வயநாட்டில் பிரச்சாரத்தை தொடங்க உள்ளனர். இன்று (3.11.2024) காலை 11 மணிக்கு மானந்தவாடி நகரில் காந்தி பூங்காவில் இருவரும் இணைந்து பிரச்சாரம் செய்ய உள்ளனர். பிற்பகல் 1 மணிக்கு மானந்த வாடி வாலாட் பகுதியில் பிரியங்கா பிரச்சாரம் செய்ய உள்ளார்.மாலை 3 மணிக்கு அரிக்கோட்டில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்க உள்ளார்.
முன்னதாக மீனங் காடி பகுதியில் தனது இரண்டாம் கட்டப் பிரச்சாரத்தை 28.10.2024 அன்று தொடங்கி வைத்துப் பேசியதாவது: சமூகத்தில் அச்சம், கோபம், துன்பம் ஆகியவற்றை ஒன்றிய பாஜக அரசு பரப்பி வருகிறது. சிறுபான்மை இனத்தவருக்கு எதிராக தாக்குதல்கள் நடப்பதை நீங்கள் கண்டீர்கள். மணிப்பூரில் நடைபெற்ற தாக் குதல்களையும் கண்டீர்கள். திட்டமிடப்பட்ட வகையில் கோபமும், வெறுப்பும் பரப்பப்படுகின்றன. சாமானிய மக்களுக்குப் பயன்படும் வகையில் அல்லாமல் பிரதமர் நரேந்திர மோடியின் பணக்கார நண்பர்களுக்கு நன்மை செய்யவே கொள்கைகள் வகுக்கப்படுகின்றன. இரவு, பகலாக உழைக்கும் விவ சாயிகள் மீது இரக்கம் காட்டப் படுவதில்லை. பழங்குடி இனத்தவர் குறித்த புரிதல் இல்லை. பணக்காரர்களுக்காக அவர்களது நிலங்கள் பறிக்கப் படுகின்றன.

அரசியல் சாசனத்தை சீர்குலைத்து வரும் பா.ஜ.க.
வயநாடு தொகுதியை கனத்த இதயத்துடன் ராகுல் காந்தி விட்டுக்கொடுத்தார். எனது சகோதரரான அவர் மீதான அன்பு காரணமாகவே நீங்கள் இங்கு வந்திருக்கிறீர்கள் என்பது எனக்குத் தெரியும். உங்கள் அனைவர் மீதும் ராகுலுக்கு ஆழமான உறவு உள்ளது. நமது அரசியல் சாசன மதிப்பீடுகளை ஒன்றிய பாஜக அரசு தொடர்ந்து சீர்குலைத்து வருகிறது. அரசியல் சாசனத்தைப்பாது காக்கவே நாங்கள் போராடி வருகிறோம். நமது ஜனநாயகத்தையும், சமத்துவத்தையும் பாதுகாக்க போராடுகிறோம். நீங்கள் ஒவ்வொருவரும் இந்தப் போராட்டத்தில் முக்கியமான படைவீரர்கள். வயநாடு தொகுதியின் மக்களவை உறுப்பினராக நான் தேர்ந் தெடுக்கப்பட்டால், தொகுதி மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கப் போராடுவேன் என்றார்.

இதைத் தொடர்ந்து வயநாடு தொகுதியில் உள்ள பனமரம், பொழுதானா உள் ளிட்ட பகுதிகளில் பிரியங்கா பிரச்சாரம் செய்தார். இந்தக் கூட்டங்களில் அவரது சகோதரர் ராகுல் காந்தி, தாயார் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். இதனிடையே, பிரியங்கா காந்தி, எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், கடந்த காலங்களில் உண்மை, நீதி, ஜனநாயகம் ஆகியவற்றின் பக்கம் வயநாடு மக்கள் நின்றனர். அரசியல் சாசனத்தை வலுப்படுத்த அவர்கள் பாடுபட்டனர். அரசியல் சாசனத்தையும் ஜனநாயகத்தையும் வலுப் படுத்த அவர்கள் தொடர்ந்து உழைப்பார்கள். வளர்ச்சிக்கான புதிய அத்தியாயத்தை அவர்கள் எழுதுவார்கள். இங்கு மக்களின் ஆர்வம் உற்சாகமளிக்கிறது’ என்று தெரிவித்துள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *