புதுடில்லி, நவ.3- டில்லி தீயணைப்புச்சேவைகள் (டிஎஃப்எஸ்) துறை, தீபாவளியன்று தீ தொடா்பாக 300-க்கும் மேற்பட்ட அழைப்புகளைப் பெற்றுள்ளன.
இது கடந்த 13 ஆண்டுகளில் மிக அதிகமாக உள்ளது என்று அதிகாரி ஒருவா் நேற்று (1.11.2024) தெரிவித்தார். அதிக அளவில் பட்டாசு பயன் படுத்தப்பட்டதே இதற்குக் காரணம் என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார்.
இது குறித்து டில்லி தீயணைப்பு சேவைகள் துறையின் தலைவா் அதுல்கா் கூறியதாவது:
இந்த தீபாவளியன்று தேசியத் தலைநகா் டில்லியில் தீ தொடா் பாகவும், அவசர கால நிகழ்வுகள் தொடா்பாகவும் 318 அழைப்புகள் வந்தன. இது கடந்த 13 ஆண்டுகளில் அதிகபட்சமாக உள்ளது.
நகரம் முழுவதும் தீயணைப்பு வாகனங்கள் மற்றும் கூடுதல் பணியாளா்களை நிறுத்தி தீயணைப்பு சேவைத் துறை தீபாவளிக்கு தயார்நிலையில் இருந்தது.
31.10.2024 அன்று மாலை 5 மணி முதல் நவம்பா் 1-ஆம் தேதி காலை 5 மணி வரை பெரும்பாலான அழைப்புகள் வந்தன.
கடந்த 2011-இல் 206 தீ தொடா்பான அழைப்புகளைப் பெற்றோம்.
2012-இல் 184, 2013-இல் 177, 2014-இல் 211, 2015-இல் 290, 2016-இல் 243, 2016-இல் 204, 2017-இல் 204, 2018-இல் 271, 2019, 2020-இல் 205, 2021-இல் 152, 2022-இல் 201 மற்றும் 2023-இல் 208 அழைப்புகள் பெறப்பட்டன.
இந்த ஆண்டு, எங்களுக்கு 318 தீ தொடா்பான அழைப்புகள் வந்தன. இது கடந்த 13 ஆண்டுகளில் இல்லாத அதிகபட்சமாகும்.