‘‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’’ நாட்டிற்குப் பெரும் அச்சுறுத்தல்!

1 Min Read

இந்தியா கூட்டணி தலைவர்கள் எதிர்ப்பு!

புதுடில்லி, நவ.2 பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே ஜனநாயகத்துக்கு விரோதமான பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வரு கிறது. அந்த வகையில் தற்போது நாட்டின் கூட்டாட்சியை சிதைக்கும் வகையில் ‘ஒரே நாடு -ஒரே தேர்தல்’ திட்டத்தை கொண்டுவருவதில் வெகு மும்முரமாக இருந்து வருகிறது.
இந்த முறை நடைமுறைக்கு வந்தால் நாட்டில் இருந்த அனைத்து சட்டமன்றங்களும் கலைக்கப்பட்டு நாடாளுமன்றத் தேர்தலோடு சட்டமன்றத் தேர்த லும் நடைபெறும். அதே போல ஒன்றிய அரசு கலைக்கப்பட்டாலோ அல்லது அது பெரும்பான்மை இழந்தாலோ அப்போதும் நாடு முழுவதும் உள்ள சட்டமன்றங்கள் கலைக்கப்படும் நிலை நிலவுகிறது.

இதன் காரணமாக இதற்கு எதிர்க்கட்சிகளும், அரசியல் விமர்சகர்களும், பொதுமக்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே ஒரே நாடு ஒரே – தேர்தலுக்கு ஒன்றிய அமைச்சரவை ஒன்றிய ஒப்புதல் அளித்தது. ஒன்றிய அரசின் இந்த செயலுக்கு பல்வேறு எதிர்க்கட்சிகளும் எதிர்ப்பு தெரி வித்துள்ளனர்.
அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, ‘‘ஒரே நாடு – ஒரே தேர்தலை நோக்கி நாங்கள் செயல்பட்டு வருகிறோம்” என பேசியுள்ளார். இதற்கு இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.

காங்கிரஸ் தலைவர் மல்லி கார்ஜூன கார்கே, ‘‘பிரதமர் மோடி சொல்வதை செய்ய மாட்டார். ஏனென்றால் நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பில் அனைவரின் கருத்தும் ஒன்றாக இருந்தால் மட்டுமே ஒரே நாடு – ஒரே தேர்தல் சாத்தியம். இதனால் ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது சாத்தியமற்றது” என தெரிவித்துள்ளார்.
அதேபோல், சி.பி.அய். பொதுச் செயலாளர் டி.ராஜா ‘‘ஒரே நாடு– ஒரே தேர்தல் என்பதுதான் பிரத மர் மோடியின் தற்போதைய நிகழ்ச்சி நிரலாக உள்ளது. இது அரசியலமைப்பை அழித்துவிடும். நாட்டிற்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்த பா.ஜ.க முயற்சி செய்கி றது” என்று கண்டித்துள்ளார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *