ஜப்பானில் உள்ள ஃப்யூஜி என்ற எரிமலைச்சிகரம் 130 ஆண்டுகளுக்குப் பின் பனிப்பொழிவின்றி காணப்படுகிறது. இது உலக காலநிலை மாற்றத்தின் வெளிப்பாடாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. அதேநேரம் இந்த ஆண்டு ஜப்பானில் நிலவும் அதிகப்படியான வெப்பம் இந்த மாற்றத்திற்கு காரணமாக இருக்கலாம் என்று சூழலியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இந்த மாற்றம் சூழலியலாளர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.