புதுடில்லி, அக்.31- வெளிநாட்டு சைபர் குற்றவாளிகளால் உருவாக்கப்படும் சட்டவிரோத மின்னணு பணப் பரிமாற்ற தளங்கள் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க ஒன்றிய அரசு எச்சரித்துள்ளது.
தனிநபர்களின் வங்கிக் கணக்கு விவரங்களை ரகசியமாக சேகரித்து சைபர் குற்றவாளிகளுக்கு சில செயலி நிறுவனங்கள் வழங்குவது தெரியவந்துள்ளது. அதன்படி, PeacePay, RTX Pay, PoccoPay, RPPay உள்ளிட்டவை சட்டவிரோத பணப்பரிமாற்ற தளங்கள் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது