திருத்துறைப்பூண்டி, அக்.27- திருத் துறைப்பூண்டி ஒன்றிய நகர திராவிடர் கழகத்தின் சார்பில் தந்தை பெரியார் 146 ஆவது ஆண்டு பிறந்தநாள் விழா தலைமைக் கழக அமைப்பாளர் சு.கிருஷ்ணமூர்த்தி தலைமையில் அனைத்து பெரியார் சிலைகளுக்கு மாலை அணிவித்தும், கழக கொடி ஏற்றியும் 17.09.2024 அன்று காலை முதல் மாலை வரை சிறப்பாக நடைபெற்றது.
திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள தந்தை பெரியார் முழு உருவ வெண்கலச் சிலைக்கு மாவட்ட ப.க. துணைத் தலைவர் ரெ.புகழேந்தி, நகர தலைவர் சு.சித்தார்த்தன், நகர செயலாளர் ப.நாகராஜன், ஒன்றிய தலைவர் ச.பொன்முடி, ஒன்றிய செயலாளர் இரா.அறிவழகன் ஆகியோர் முன்னிலையில் தலைமைக் கழக அமைப்பாளர் சு.கிருஷ்ணமூர்த்தி தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. திருத்துறைப்பூண்டி நகர திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நகர் மன்ற தலைவர் கவிதா பாண்டியன் கழகக் கொடியை ஏற்றி, தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தார். நிகழ்வில் மாவட்ட, ஒன்றிய, நகர கிளைக் கழக பொறுப்பாளர்களும் பெரும் திரளாக கலந்து கொண்டனர். இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பில் எழிலரசன், வட்டார காங்கிரஸ் கட்சித் தலைவர் தியாகராஜன், தோழர்களுடன் வருகை தந்து மாலை அணிவித்தார்கள். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நகர மேனாள் செயலாளர் மா.முருகேசன் தலைமையில் மாலை அணிவித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் அய்.வி.நாக ராஜன் மாலை அணிவித்தார். நிகழ்வில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜோதிபாசு, மாவட்டக் குழு உறுப்பினர் சாமிநாதன், ஒன்றியச் செயலாளர் டி.வி காரல் மார்க்ஸ், நகரச் செயலாளர் கோபு, நகர் மன்ற துணைத் தலைவர் ஜெயபிரகாஷ் கழகத் தோழர்களுடன் வருகை தந்து மாலை அணிவித்தார்கள்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மேனாள் மாவட்ட செய லாளர் வி.த.செல்வம் தலைமையில் வருகை தந்து மாலை அணிவித்தார்கள்.
திருத்துறைப்பூண்டி ஒன்றியம், எழிலூர் பெரியார் நினைவு சமுத்துவ புரத்தில் உள்ள பெரியார் சிலைக்கு பெரியார் பிஞ்சுகள் சு.வீ.அமுதன், பா.சமரன், ம.அஸ்மதா ஆகியோர் மாலை அணிவித்தார்கள்.
மீனம்பநல்லூர் கடை தெருவில் தந்தை பெரியார் படத்திற்கு ஒன்றிய செயலாளர் இரா.அறிவழகன் தலை மையில் தலைஞாயிறு ஒன்றிய அமைப்பாளர் அய்.பாஸ்கர் முன்னி லையில் நகரத் தலைவர் சு.சித்தார்த்தன் மாலை அணிவித்து கழகக் கொடி ஏற்றினர்.
சிதம்பரம் கோட்டத்தில் உள்ள இரா.அறிவழகன் இல்லத்தில் மாவட்ட ப.க துணை தலைவர் ரெ.புகழேந்தி தலைமையில் தலைஞாயிறு ஒன்றிய அமைப்பாளர் அய்.பாஸ்கர் முன்னி லையில் தந்தை பெரியார் படத்திற்கு மாலை அணிவித்துக் கழக கொடி ஏற்றினார்.
இராயநல்லூரில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு ஒன்றிய தலைவர் ச.பொன்முடி தலைமையில், ஒன்றிய செயலாளர் இரா.அறிவழகன் முன்னி லையில் ஒன்றிய துணை செயலாளர் ந.செல்வம் மாலை அணிவித்தார். மாவட்ட இளைஞரணி செயலாளர் மு.மதன் கழகக் கொடி ஏற்றினார்.
விளக்குடி அஞ்சலகம் அருகில் உள்ள கழகக் கொடியினை தலை ஞாயிறு ஒன்றிய அமைப்பாளர் அய்.பாஸ்கர் தலைமையில் திருத்து றைப்பூண்டி இளைஞரணி தோழர் சந்தோஷ் முன்னிலையில் கழக நகர தலைவர் சீரா வட்டம்
இரா.மணிகண்டன் கொடி ஏற்றினார்.
விளக்குடி கடைத்தெருவிலுள்ள கழகக் கொடியினை மாராச்சேரி ச.சுரேஷ் தலைமையில், மாவட்ட மாணவர் கழகத் தலைவர் கே.அழ கேசன் முன்னிலையில் பெரியார் பிஞ்சு சு.வீ.அமுதன், பா.ச மரன் ஆகியோர் கழகக் கொடியினை ஏற்றினார்கள்.
மேட்டுப்பாளையம் கடைத்தெரு வில் உள்ள கழகக் கொடியினை சீராவட்டம் இரா.மணிகண்டன் தலைமையில், நகர தலைவர் சு.சித்தார்த்தன் முன்னிலையில், ஒன்றிய தலைவர் ச.பொன்முடி ஏற்றினார்.
நானா நல்லூர் ரெ.புகழேந்தி இல்லத்தில் உள்ள கழகக் கொடியை நகரத் தலைவர் சு.சித்தார்த்தன் தலைமையில், மாராச்சேரி ச.சுரேஷ் முன்னிலையில் சீராவட்டம் தங்க.மணிகண்டன் ஏற்றினார்.
திருத்துறைப்பூண்டி பைபாஸ் ரோடு சுரேஷ் முரளி இல்லம் அருகில் உள்ள கழகக் கொடியினை மாவட்ட மாணவர் கழகத் தலைவர் கே.அழகேசன் தலைமையில் நகர தலைவர் சு.சித்தார்த்தன் முன்னிலையில், நகர மகளிரணி செயலாளர் சு.சித்ரா ஏற்றி வைத்தார்கள்.
பண்ணைத் தெரு நகர செயலாளர் ப.நாகராஜன் இல்லம் அருகில் உள்ள கழக கொடியினை நகர தலைவர் சு.சித்தார்த்தன் தலைமையில், தலைமைக் கழக அமைப்பாளர் சு.கிருஷ்ணமூர்த்தி முன்னிலையில், ஒன்றிய மகளிரணி செயலாளர் நா.ரேவதி ஏற்றி வைத்தார்கள்
மாராச்சேரி ச.சுரேஷ் இல்லம் அருகில் உள்ள கழக கொடியை நகர செயலாளர் ப.நாகராஜன் தலைமையில், சீராவட்டம் இரா.மணிகண்டன் முன்னிலையில், நகரத் துணைச் செயலாளர் ப.சம்பத்குமார் ஏற்றி வைத்தார்கள்
மணக்குடி சொக்கலிங்கம் இல்லம் அருகில் உள்ள கழகக் கொடியை தலைஞாயிறு ஒன்றிய அமைப்பாளர் அய்.பாஸ்கர் தலைமையில், நகர தலைவர் சு.சித்தார்த்தர் முன்னிலையில், தலைமைக் கழக அமைப்பாளர் சு.கிருஷ்ணமூர்த்தி ஏற்றி வைத்தார்கள்
சீராவட்டம் கழகக் கொடியை மாவட்ட இளைஞரணி செயலாளர் மு.மதன் தலைமையில் மணக்குடி சொக்கலிங்கம் முன்னிலையில், ஒன்றிய செயலாளர் இரா.அறிவழகன் ஏற்றி வைத்தார்.
ஆலங்குடி கடைத்தெருவில் உள்ள கழகக் கொடியை தலைஞாயிறு ஒன்றிய அமைப்பாளர் அய்.பாஸ்கர் தலைமையில், கீழையூர் ஒன்றிய இளை ஞரணி செயலாளர் தங்க.கிருஷ்ணன் முன்னிலையில், நகரச் செயலாளர் ப.நாகராஜன் ஏற்றி வைத்தார்.
இந்நிகழ்வில், மாவட்ட ப.க துணைத் தலைவர் ரெ.புகழேந்தி, ஒன்றிய தலைவர் ச.பொன்முடி, ஒன்றிய செய லாளர் இரா.அறிவழகன், ஒன்றிய துணைச் செயலாளர் ந.செல்வம், நகர தலைவர் சு.சித்தார்த்தன், நகரச் செயலாளர் ப.நாகராஜன், முத்துப்பேட்டை ரெ.கருணாநிதி, தலைஞாயிறு ஒன்றிய தலைவர் அய்.பாஸ்கர், ஒன்றிய மகளிரணி செயலாளர் நா.ரேவதி, நகர மகளிரணி செயலாளர் சு.சித்திரா, மாவட்ட இளைஞரணி செயலாளர் மு.மதன், மாவட்ட மாணவர் கழகத் தலைவர் கே.அழகேசன், அண்ணாநகர் சந்தோஷ், கழக தோழர்கள் பெரியார் பெரும் தொண்டர் நடராஜன், சீரா வட்டம் தங்க.கிருஷ்ணன், இரா.மணிகண்டன், சு.தேன்னவன், பு.அறிவுமுதல்வன், புலவேந்தன், கோபாலகிருஷ்ணன், புகழேந்தி, அருமை கண்ணு, ஆகாஷ், சஜித், நித்திக், ஹரிஸ், வினோத், விஹாஷ், நா.கலைச்செல்வி, ஆகியோர் வேன் மூலம் பயணம் செய்து கலந்து கொண்டனர்.