கார்கே அவமதிக்கப்பட்டார் என்ற பொய்க் கூற்று பா.ஜ.க. மன்னிப்பு கோர வேண்டும் : காங்கிரஸ் வலியுறுத்தல்

viduthalai
2 Min Read

புதுடில்லி, அக்.25 வயநாடு தேர்தலில் போட்டியிடும் பிரியங்கா காந்தி வேட்புமனு தாக் கலின்போது, காங்கிரஸ் மூத்தத் தலைவர் மல்லி கார்ஜுன கார்கே அறைக்கு வெளியே இருக்கும் ஒளிப்படத்தினை சுட்டிக்காட்டிய பாஜகவி னர், தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், கார்கேவை பிரி யங்கா, ராகுல், சோனியா காந்தி மூவரும் வெளியில் நிற்க விட்டதாக குற்றம் சாட்டினர். இந்த நிலையில், மல்லிகார்ஜுன கார்கேவை அவமதித்ததற்காக பாஜக வினர் மன்னிப்பு கோர வேண்டும் என்று காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் வேணுகோபால் கூறியதா வது, “பாஜகவினர் கூறு வது முழுக்க முழுக்க பொய்கள் நிறைந்தவை. நான் உள்பட சோனியா, ராகுல் மூவரும் வேட்புமனு தாக்கல் அறைக்கு சென்றபோதே அறையின் கதவுகள் மூடப்பட்டிருந்தன.

அறைக்கதவுகள் திறக்கும் வரையில் நாங் களும் வெளியில்தான் காத் திருந்தோம். அதுபோலவே, எங்களுக்கு அடுத்து வந்த மல்லிகார்ஜூன கார்கேவும் காத்திருக்க வேண்டியிருந்தது. பொய் களைப் பரப்புவதன் மூலம், கார்கேவை பாஜக அடிக்கடி அவமதித்து வரு கிறது’’ என்று தெரிவித்தார்.
இதுகுறித்து, அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா “காங்கிரஸின் மூத்தத் தலைவரும் தாழ்த்தப்பட்ட சமூக தலைவருமான கார்கே மீது அவமரியாதை காட்டப்பட்டுள்ளது’’ என்று கூறியிருந்தார்.

கருநாடக பாஜக தலைவர் ராஜீவ் சந்திர சேகர் “பிரியங்கா காந்தி வேட்புமனு தாக்கல் செய்தபோது, கார்கே வெளியில் நிறுத்தப்பட்டிருந்தார்; ஏனெனில், கார்கே அவர்களது குடும்பம் அல்ல. அவர்கள் மூத்த தாழ்த்தப்பட்ட சமூகத் தலைவரையும் கட்சித் தலைவரையும் இவ்வாறு நடத்தினால், வயநாடு மக்களை எப்படி நடத்து வார்கள் என்று கற்பனை செய்து பாருங்கள்’’ என்று தெரிவித்திருந்தார்.

மேலும், பாஜக அதி காரபூர்வ எக்ஸ் பக்கத்தில் தெரிவித்ததாவது “இன்று பிரியங்கா காந்தியின் நியமனத்தின்போது, அறையிலிருந்து மல்லி கார்ஜுன கார்கே வெளியேற்றப்பட்டதைப் போல, இடஒதுக்கீட்டை நீக்கிய பிறகு, ராகுல் காந்தி தாழ்த்தப்பட்ட சமூகத்தினரின் மரியாதை யையும் வாய்ப்புகளையும் பறித்துவிடுவார். ராகுலின் குடும்பத்தால் கார்கேவை இப்படி அவமதிக்க முடிந் தால், தாழ்த்தப்பட்ட சமூ கத்தின்மீது அவர்களுக்கு எவ்வளவு வெறுப்பு இருக்க வேண்டும் என்பதை கற்பனை செய்து பாருங்கள்’’ என்று பதிவிட்டிருந்தனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *