புதுடில்லி, அக். 23- தண்ணீர் சேமிப்பு மற்றும் பயன்பாட்டில் சிறந்த நிர்வாகம் செய்யும் தனிநபர்கள் மற்றும் அமைப்புகளின் பணிகளை பாராட்டி தேசிய நீர் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த வகையில் 5ஆவது தேசிய நீர் விருது வழங்கும் விழா ஒன்றிய நீர்வளத்துறை சார்பில் டில்லியில் உள்ள விஞ்ஞான பவனில் நேற்று (22.10.2024) நடைபெற்றது.
விழாவில் ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சர் சி. ஆர்.பாட்டீல், இணை அமைச்சர்கள் சோமண்ணா, ராஜ்பூஷன் சவுத்ரி ஆகியோரது முன்னிலையில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு விருதுகளை வழங்கி னார்.
விழாவில் தமிழ்நாட்டுக்கு 4 விருதுகள் கிடைத்தன. கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்துக்கு மழைநீர் சேகரிப்பு, நிலையான வளாக நீர் நிர்வாகம் ஆகியவற்றுக்காக முதல் பரிசு வழங்கப்பட்டது. இந்த விருதை வேளாண் பல்கலைக் கழக துணைவேந்தர் கீதாலட்சுமி பெற்றுக் கொண்டார். இதில் சென்னை அய்.அய்.டி.க்கு 3-ஆவது பரிசு கிடைத்தது. அதுபோல சிறந்த தொழில் துறை பிரிவில் காஞ்சிபுரம் அப்பல்லோ டயர்ஸ் நிறுவனம் 2ஆவது பரிசையும், சிறந்த நீர் பயனர் சங்கம் பிரிவில் புதுக்கோட்டை பரம்பூர் பெரிய தொட்டி நீர் பயனீட்டாளர் சங்கம் 3ஆவது பரிசையும் பெற்றன.