“என் கணவர் நீண்ட ஆயுளோடு இருக்கணும் கடவுளே”
பூஜை முடித்த கையோடு சாப்பாட்டில் விஷம் வைத்த மனைவி
லக்னோ, அக்.23- உத்தரப்பிரதேச மாநிலத் தில் தனது கணவர் ஆரோக்கியமாக நீண்ட ஆயுளோடு வாழ வேண்டும் என திருமணமான பெண் கள் ‘கருவா சவுத்’ என்ற பெயரில் விழா கொண் டாடுவார்கள்.
கொவ்சாமி மாவட் டத்திலுள்ள இஸ்மாயில் போர் பகுதியைச் சேர்ந்தவர் ஷைலேஷ் குமார். இவரது மனைவி சவிதா தனது கணவர் நீண்ட ஆயுளுக்காக கருவா சவுத் நோன்பை முடித்தார். அதன் பிறகு கணவர் மனைவி இருவரும் இணைந்து சாப்பிட்டு உள்ளனர். அப்போது சவிதா தனது கணவரின் சாப்பாட்டில் விஷம் வைத்துள்ளார். அவர் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே பக்கத்து வீட்டிற்கு சென்று வருகிறேன் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றார்.
உணவை சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே சைலேஷ் மயங்கி விழுந் தார். அவரை அவரது சகோதரர் அகிலேஷ் லட்சுமி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார் அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சைலேஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரி வித்துள்ளனர்.
இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்திய போது திடுக்கிடும் தகவல் தெரியவந்தது. எனது கணவருக்கும் இன்னொரு பெண்ணுக்கும் திரும ணத்தை மீறிய உறவு இருந்தது. அதன் காரண மாகவே அவரை விஷம் வைத்து கொலை செய் தேன் என சபிதா பர பரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். இது குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.