திராவிட இயக்க சிந்தனையாளர் முரசொலி செல்வம் அவர்கள் கடந்த 10–ஆம் தேதி அன்று திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு மறைவுற்றார். தமிழ்நாட்டின் – திராவிட இயக்கத்தின் போர்வாள் – ‘முரசொலி’ சார்பில் முரசொலி செல்வம்அவர்களின் படத்திறப்பும் – புகழஞ்சலியும் வருகிற 21.10.2024 மாலை 5 மணிக்கு – சென்னை அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் நடை பெறுகின்றது.
நிகழ்ச்சிக்கு தி.மு.கழகத் தலைவர் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமை வகிக்கிறார். முரசொலி செல்வம் அவர்களின் படத்தை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் திறந்து வைக்கிறார். தி.மு. கழக பொதுச் செயலாளர் – நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், ‘இந்து’என். ராம், புரட்சித் தமிழன் சத்தியராஜ், பேராசிரியர் மு.நாகநாதன் ஆகியோர் புகழுரையாற்றுகின்றனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ‘முரசொலி செல்வம்’ படத்தினை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி திறந்து வைக்கிறார்!
Leave a comment