தமிழ்நாடும் காஷ்மீரும் ஜனநாயகப் போராட்டத்தில் இணைந்து பயணிக்கும்! முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

1 Min Read

ஜ ம்மு-காஷ்மீர் முதலமைச்சராக பதவியேற்றுள்ள ஒமர் அப்துல்லாவுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஒமர் அப்துல்லாவுக்கு வாழ்த்து தெரிவித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், ‘ஜம்மு-காஷ்மீர் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள ஒமர் அப்துல்லாவுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள்!’ பதவியேற்பு நிகழ்ச்சிக்கு தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா தனக்கு அழைப்பு விடுத்திருந்ததாகவும், ஆனால், மழை நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவிருந்ததன் காரணமாக தன்னால் பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியவில்லை என்றும் வருத்தத்தை தெரிவித்துள்ளார். இந்த நிலையில், தன் சார்பாக திமுக எம்.பி. கனிமொழி இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டதையும் பதிவிட்டுள்ளார். மாநில உரிமைகளை வென்றெடுக்கும் ஜனநாயகப் போராட்டத்தில் இந்தியாவின் தென் முனையில் உள்ள தமிழ்நாடும் வடமுனையில் உள்ள ஜம்மு காஷ்மீரும் உரக்கக் குரலெழுப்பும் என்றும், இணைந்து பயணித்து வெற்றி காண்போம் என்றும் பதிவிட்டுள்ளார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *