மூடநம்பிக்கை ஒழிப்பு, பெண்ணுரிமை பாதுகாப்பு விளக்கப் பொதுக்கூட்டம்
திண்டிவனம், அக்.17- திண்டிவனம் கழக மாவட்டம் பாஞ்சாலம் கிளைக் கழகத்தின் சார்பில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா, மூடநம்பிக்கை ஒழிப்பு,பெண்ணுரிமை பாது காப்பு விளக்கப் பொதுக்கூட்டம் பகுத்தறிவாளர் கழக செய லாளர் நவா.ஏழுமலையின் தலை மையில் சிறப்பாக நடைபெற்றது.
ஊராட்சி மன்ற தலைவர் கமலா நாராயணசாமி,திமுக கிளை கழக செயலாளர் எ.நாராயணசாமி, விசிக மகளிர் அணி மாவட்ட செயலாளர் சாந்தி பெருமாள், மாவட்டத் தலைவர் இர.அன்பழகன், மாவட்ட செயலாளர் செ.பரந்தாமன் மாவட்ட மகளிர் அணி தலைவர் விஜயலட்சுமி தாஸ், மாநில இளைஞரணி துணை செயலாளர் தா.தம்பி பிரபாகரன், மாவட்ட அமைப்பாளர் பா.வில்லவன் கோதை,
க.பாசுந்தரம்,இரா.விநாயகமூர்த்தி, இராஜராம், பா.அருள் ஆகியோர் முன் னிலை வகித்தனர். ஒலக்கூர் ஒன்றிய தலைவர் ஏ.பெருமாள் அனைவரையும் வரவேற்று பேசினார்.
தலைமை கழக அமைப் பாளர் தா.இளம்பரிதி துவக்க உரையாற்றினார். திராவிடர் கழக துணை பொதுச் செய லாளர் சே.மெ.மதிவதனி சிறப் புரையாற்றினார்.
நிகழ்ச்சியில் அவர் பேசும் போது, 100 ஆண்டுகளுக்கு முன்பே பெண்களுக்கு கல்வி வேண்டும், சொத்தில் சம உரிமை வழங்க வேண்டும், ஆண்களுக்கு இணையாக பெண்களை நடத்த வேண்டும், கணவணை இழந்தவருக்கு மறுவாழ்வு தரவேண்டும் என சொன்னார் பெரியார்.
ஈட்டி கணேசனின் மந்தி ரமா? தந்திரமா? நிகழ்வை பாஞ்சாலம் பொதுமக்களும் இளைஞர்களும் வெகு ஆச்சரிய மாக கண்டுகளித்தனர்.
திமுக மாவட்ட செயலாளர் மருத்துவர் பா.சேகர், திமுக மாநில தீர்மானக்குழு துணைத் தலைவர் மருத்துவர் இரா.மாசிலாமணி, ஒலக்கூர் ஒன்றிய திமுக செயலாளர் எ.இராஜாராம், விசிக மாவட்ட செயலாளர் சூ.மலைச்சாமி, விசிக பொருளாளர் சிவ.பிரபாகரன், மாநில இளைஞரணி துணை செயலாளர் தா.தம்பி பிரபாகரன், விழுப்புரம் மாவட்ட தலைவர் சே.வ.கோபண்ணா, விழுப்புரம் மாவட்ட செய லாளர் அரங்க.பரணி தரன், விழுப்புரம் மாவட்ட இளைஞரணி செயலாளர் த.பகவான் தாஸ், திண்டிவனம் நகரத் தலைவர் உ.பச்சையப்பன் திண்டிவனம் நகர செயலாளர் சு.பன்னீர்செல்வம், மரக்காணம் ஒன்றிய செயலாளர் ஜெ.கன்னி யப்பன், மயிலம் ஒன்றிய தலைவர் இரா.பாவேந்தன், மயிலம் ஒன்றிய செயலாளர் ச.அன்புக்கரசன், செஞ்சி நகர செயலாளர் தா.நந்தகுமார், நகர இளைஞரணி தலைவர் ஓவியர் செந்தில், மாவட்ட இளைஞரணி செயலாளர் மு.இரமேஷ், வானூர் ஒன்றிய தலைவர் தி.க. அன்பரசன், வானூர் ஒன்றிய செயலாளர் சிவ.கௌரி.
சிறீதர். விசிக நிர்வாகிகள் வடிவேல், விஸ்வதாஸ், திமுக நிர்வாகிகள் எம்.கிருஷ் ணன், ஆர்.குணசேகரன், கே.ராஜேந்திரன், கே.சீத்தா பூங்காவனம், எஸ்.துரைசாமி, சி.ஜானகிராமன், பி.சக்திவேல், பி.பாஸ்கர், கே.புருஷோத்தமன், வழக்கறிஞர்கள் எம்.பன்னீர் செல்வம், எம்.ரமேஷ், வி.மகேந்திரன், எம்.தமிழ்குமரன், ஒலக்கூர் ஒன்றிய இளைஞரணி செயலாளர் க.சுகன், பெரியார் பற்றாளர் கஜேந்திரன், மகளிர் அணி தோழியர் நிவேதா, சித்ரா ஆகியோர் கலந்து கொண்டனர். மாவட்ட மாணவர் கழக தோழர் பா.பிரகாஷ் நன்றியுரை கூறினார்.