அகமதாபாத், அக்.14 குஜராத் மாநிலம், அங்கலேஷ்வரில் உள்ள மருந்து தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து ரூ.5,000 கோடி மதிப்புள்ள கோகைன் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. குஜராத் காவல் துறை மற்றும் டில்லி காவல் துறையின் சிறப்புப் பிரிவினா் இணைந்து ஞாயிற்றுக்கிழமை நடத்திய கூட்டு நடவடிக்கையில் இந்தப் போதைப் பொருள் சிக்கியது. குஜராத் மற்றும் டில்லியில் மட்டும் கடந்த 15 நாள்களில் அமலாக்க முகமைகளால் ரூ.13,000 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. அந்த வகையில், டில்லியின் மஹிபால்பூரில் உள்ள சரக்கு கிடங்கில் சிறப்புக் காவல் துறையினா் கடந்த 1-ஆம் தேதி மேற்கொண்ட சோதனையில் ரூ.5,600 கோடிக்கும் அதிக மதிப்பிலான கோகைன் மற்றும் கஞ்சா போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டவா்களிடம் நடைபெற்ற விசாரணையின் அடிப்படையில், ரமேஷ் நகரில் உள்ள கடையில் இருந்து கூடுதலாக 208 கிலோ போதைப் பொருள் கைப்பற்றப்பட்டது. இந்தப் போதைப் பொருள்கள் குஜராத் மாநிலம், அங்கலேஷ்வரை சோ்ந்த மருந்து நிறுவனத்தின் இருந்து பெறப்பட்டதை காவல் துறையினா் கண்டறிந் தனா். இதைத் தொடா்ந்து, அந்நிறுவனத்தில் அதிரடி சோதனை நடத்திய காவல் துறையினா், 518 கிலோ போதைப் பொருளைக் கைப்பற்றினா்.
குஜராத்தில் ரூ.5,000 கோடி போதைப் பொருள்
1 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
TAGGED:போதைப் பொருள்
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
