மும்பை, அக்.14 மும்பையில் பணிமனைக்குச் சென்ற புறநகர் ரயிலின் இரண்டு பெட்டிகள் தடம் புரண்டதால் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன.
மகாராட்டிர மாநிலம், மும்பை சென்ட்ரலில் இருந்து ஞாயிற்றுக்கிழமை மதியம் 12.10 மணியளவில் பணிமனைக்குச் சென்ற புறநகர் ரயிலின் இரண்டு பெட்டிகள் திடீரென தடம் புரண்டன.
அப்போது ரயில் பெட்டிகள் காலியாக இருந்ததால் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை என மேற்கு ரயில்வேயின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி வினீத் அபிஷேக் தெரிவித்தார்.
சர்ச்கேட் மற்றும் மும்பை சென்ட்ரல் இடையே தாதர் நோக்கி செல்லும் மெதுவான பாதை தடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், தொடர் செயல்பாடுகளை உறுதி செய்வதற்காக இந்த இரண்டு நிலையங்களுக்கு இடையே உள்ள விரைவுப் பாதையில் ரயில்கள் திருப்பி விடப்படுகின்றன என்று அதிகாரி மேலும் கூறினார்.
ரயில் பெட்டிகளை மீண்டும் இயக்கவும், சேவைகளை மீட்டெ டுக்கவும் முயற்சிகள் நடந்து வருகின்றன என்றார் அவர்.