மனித வள மேலாண்மை துறை அறிவுறுத்தல்
சென்னை, அக்.14- பணியின்போது அரசு ஊழியர்கள் ஒளிப் படத்துடன் கூடிய அடையாள அட்டை அணிவது கட்டாயம் என மனித வள மேலாண்மை துறை அறிவுறுத்தி உள்ளது.
1986ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு பிறப்பித்த அரசாணை யின்படி, அரசு ஊழியர்கள் தங்களது பணி நேரத்தின் போது பெயர் பட்டையை அணிந்திருக்க வேண்டும் என்ற உத்தரவு நடைமுறையில் இருந்து வந்தது. அதன்பிறகு, ஒளிப் படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்பட்ட பிறகு, பழைய நடைமுறை கைவிடப்பட்டது.
ஆனாலும், அரசு ஊழியர்கள் பலர் பணியின்போது அடையாள அட்டை அணி வது இல்லை என்ற குற்றச் சாட்டு தொடர்ந்து எழுந்து வந்தது. இந்த நிலையில், கடந்த 2018ஆம் ஆண்டு ஜூலை மாதம் 16ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு ஒன்றை பிறப்பித்தது.
60 நாட்களுக்குள்…
அந்த உத்தரவில், “தமிழ்நாடு அரசின் அனைத்து அதிகாரி கள், ஊழியர்கள் குறிப்பாக, பொதுமக்களிடம் நேரடியாக பணியாற்றும் ஊழியர்களுக்கு 60 நாட் களுக்குள் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை வழங்க வேண்டும்” என்று கூறப்பட்டிருந்தது.
மேலும், “அடையாள அட்டை அணிவது தொடர்பாக ஏற்கெனவே அரசு விதி இருந்தால் அந்த விதியை மிகவும் கண்டிப்பாக அமல்படுத்த வேண்டும். விதியை பின்பற்றாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் உத்தரவிட்டு இருந்தது.
அடையாள அட்டை கட்டாயம்
அதன்பிறகு, பணி நேரத்தில் அரசு ஊழியர்கள் அடையாள அட்டை அணிவது கட்டாயம் என தமிழ் நாடு அரசு உத்தரவிட்டதுடன், அதை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தது. உத்தரவை மீறுவோர்மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு பணியாளர் நலன் மற்றும் சீர்திருத்தத் துறை உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்த நிலையில், கடந்த 3ஆம் தேதி மனிதவள மேலாண்மை துறையின் அரசு சார்பு செய லாளர் அ.செ.ராஜன், மக்கள் உரிமை நுகர்வோர் பாதுகாப்பு மய்யத்தின் நிறுவன பொதுச் செயலாளர்
என்.எஸ்.செல்வராஜூக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டு உள்ளதாவது:-
ஒழுங்கு நடவடிக்கை
அரசு ஊழியர்கள் அனைவரும் அலுவலக நேரத்தில் தவறாமல் ஒளிப் பட்ட அடையாள அட்டையை அணிய வேண்டும் என்பதை வலியுறுத்தி அனைத் துத் துறைகளின் தலைவர்களுக்கும் அரசு அவ்வப்போது ஆணைகள் அறிவுறுத் தல்களைப் பிறப்பித்து வருகிறது.
மேலும், அரசுக் கடித எண் 5550 ஏ 2/2020-1 பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்த துறை நாள் 19.2.2020 அன்று அடையாள அட்டை அணிவது தொடர் பான அறிவுறுத் தங்கள் மீண்டும் வலி யுறுத்தப்பட்டு உள்ளன.
அவ்வரசுக் கடிதத்தில் அனைத்துத் துறைத் தலைவர்கள் மாவட்ட ஆட்சி யர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள கீழ்நிலை அலுவலகங்க ளுக்கு அரசு ஆணைகள் அறி வறுத்தங்களின்படி, பணியாளர்கள், ஒளிப்பட அடையாள அட்டையைத் தவறாமல் அணியுமாறு அறிவுறுத்தியும்.
அவ்வாறு ஒளிப்பட அடையாள அட்டைகளை அணியா தவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டு உள்ளது.
எனவே, இவ்வரசாணை அறிவுரைகள் பின்பற்றப்படாத நேர்வுகளில், பொது மக்கள் தகுந்த நடவடிக்கை மற்றும் தீர்வுக்காக அலுவலகத் தலைவர் அல்லது சம்பந்தப்பட்ட அலுவலக துறைத் தலைவர் ஆகியோரை அணுகி தீர்வு பெறலாம் என தெரிவிக்கப்படுகிறது.
– இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.