மழைநீர் தேங்குவதை தடுக்க கோயம்பேடு மார்க்கெட்டில் ரூ.17 கோடியில் வடிகால் பணி – அமைச்சர் பி.கே. சேகர்பாபு தகவல்

1 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

சென்னை, அக்.13 கோயம்பேடு மார்க்கெட்டில் மழைநீர் தேங்குவதை தடுக்கும் வகையில், ரூ.17 கோடியில் வடிகால் அமைக்கும் பணி விரைவில் தொடங்க உள்ளதாக, அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களின் வசதிக்காக, ரூ.84 லட்சத்தில் புதிய மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது. இந்தப் பணியை நேற்று (12.10.2024) காலை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேரில் ஆய்வு செய்தார். பின்னர், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் மற்றும் அங்காடி நிர்வாகக் குழு அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து கோயம்பேடு வணிக வாளாகத்தில் அமைக்கப்பட இருக்கும் மழைநீர் வடிகால் திட்டப் பணியை பார்வையிட்டார்.

பின்னர், அமைச்சர் பி.கே.சேகர்பாபு செய்தியாளர்களிடம் கூறியதாவது: வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோயம்பேடு மொத்த அங்காடியில் மழைநீர் தேங்காமல் தடுக்கும் வகையில், ரூ.17 கோடி செலவில் புதிய மழைநீர் வடிகால் அமைக்க ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் தொடங்கப்படும். கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடியில் ஏற்கனவே இருக்கின்ற 850 மீட்டர் நீளம் கொண்ட மழைநீர் கால்வாயை சீரமைக்கும் பணி விறு விறுப்பாக நடைபெறுகிறது. மழைக் காலத்தில் கோயம்பேடு அங்காடியில் தேங்கும் மழைநீரை வெளியேற்றுவதற்கு 60 எச்பி உயர்திறன் கொண்ட ராட்சத மோட்டார்கள் தயார் நிலையில் வைக்க உத்தரவிட்டுள்ளேன். காய்கறி சந்தையில் மழைக் காலத்தில் தேங்கும் காய்கறிக் கழிவுகளை உடனுக்குடன் அப்புறப்படுத்த கூடுதலாக 20 பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். காய்கறிக் கழிவு மூலம் சுதாதார சீர்கேடு ஏற்படாதவாறு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *