மும்பை, அக்.13 மும்பையில் தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார்) கட்சியைச் சோ்ந்த மேனாள் அமைச்சர் பாபா சித்திக் கொலைக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
மக்களவை எதிர்க்கட்சித் தலை வரும், காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி தன்னுடைய ‘எக்ஸ்‘ தளப் பதிவில், ”பாபா சித்திக்கின் மோசமான கொலை அதிர்ச்சியையும், வருத்தத்தையும் அளிக்கிறது. இந்தக் கடினமான நேரத்தில் எனது எண்ணங்கள் முழு மையாக அவரது குடும்பத்தைப் பற்றியே உள்ளது.
மகாராட்டிரத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளது என்பதை இந்தப் பயங்கர நிகழ்வு எடுத்துக்காட்டுகிறது. இந்த நிகழ்விற்கு அரசாங்கம் முழு பொறுப்பேற்க வேண்டும். நீதி வெல்ல வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார். மும்பையில் தேசியவாத காங்கிரசு (அஜித் பவார்) கட்சியைச் சோ்ந்த மேனாள் அமைச்சர் பாபா சித்திக்கை அடையாளம் தெரியாத நபா்கள் நேற்று (12.10.2024) துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனா்.
மூன்று முறை சட்டமன்ற உறுப்பினரான இவா், காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி அண்மையில் தேசியவாத காங்கிரசில் இணைந்தார்.
நிர்மல் நகா் பகுதியில் தனது மகனும், பாந்தரா கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரான ஜீஷான் வீட்டிற்கு வெளியே வந்தபோது அடையாளம் தெரியாத மூன்று நபா்கள் அவரை நோக்கி மூன்று முறை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு தப்பினா் என்று காவல்துறையிரன் தெரி வித்தனா். பிரபல ரவுடி லாரன்ஸ் பிஸ்னொய்க்கு இந்த கொலை வழக்கில் தொடர்புள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.