புதுடில்லி, அக்.12 மைசூரிலிருந்து தர்பங்கா நோக்கிச் சென்ற பாக்மதி அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில் (12578) நேற்று (11.10.2024)இரவு 7.30 மணியளவில் பொன்னேரியை அடுத்த கவரப்பேட்டை ரயில் நிலையம் அருகே சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது.
19 பேர் படுகாயம் அடைந்த நிலை யில், மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த விபத்து குறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி ஒன்றிய அரசை விளாசியுள்ளார்.
இதுதொடர்பாக ராகுல் காந்தி தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
ஒடிசா மாநிலம் பாலாசோரில் நடந்த ரயில் விபத்து போலவே கவ ரைப்பேட்டையில் விபத்து நடந்துள்ளது. ஏராளமான ரயில் விபத்துகள் நடந்து பல உயிர்கள் பறிபோனபோதும் ஒன்றிய அரசு பாடம் கற்றுக் கொள்ளவில்லை. ஒன்றிய அரசு விழித்துக்கொள்ள இன்னும் எத்தனை குடும்பங்கள் அழிய வேண்டும்?”
இவ்வாறு ராகுல் காந்தி தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.