பள்ளிகளில் மதிய உணவு
மத்தியப் பிரதேசத்தில் பள்ளிகளில் மதிய உணவு செய்வதற்கான பொருட்களைக் கொடுத்தால் அப்படியே மளிகைக்கடைக்கு விற்றுவிடுவார்கள்; மீதம் உள்ளவற்றை வீட்டிற்கும் கொண்டு சென்றுவிடுவார்கள்.
மாணவர்களுக்கு, நியாயவிலைக் கடைகளில் கிடைக்கும் இலவச அரிசியை அள்ளிக்கொண்டு வந்து, அதை அவித்து, சோறு என்ற பெயரில் கொடுப்பார்கள்; அதனோடு சுடுதண்ணீரில் மஞ்சளும், மிளகாய் பொடியும், உப்பும் கரைத்து கொடுப்பார்கள்.
விசாரணைக்குச் சென்ற கல்வி அமைச்சர் பிரதியுமான் சிங் தோமாருக்கும் அந்த மஞ்சள், மிளகாய், உப்பு கலந்த சுடுதண்ணீரும், ரேசன் அரிசி சோறும் கொடுத்தார்கள். அவரோ ‘‘நடவடிக்கை எடுப்பேன்’’ என்று கூறிச்சென்றவர் பின்னர் அந்தப் பக்கமே வரவில்லை.
வகுப்பறையில் ஆசிரியருக்கு மசாஜ் செய்யும் மாணவர்கள்!
ராஜஸ்தானில் அரசுப் பள்ளியில் மாணவர்களை மஜாஜ் செய்ய வைத்து ஓய்வெடுக்கும் ஆசிரியையை படம் எடுக்கிறார்கள் என்று தெரிந்தும், ‘‘எடுத்துக்கொள்’’ என்று சொல்லிகொண்டே மாணவர்களைப் பார்த்து, ‘‘நீங்க மஜாஜ் செய்யுங்கள்’’ என்று கூறுகிறார்.
எப்படி இருக்கிறது பி.ஜே.பி. ஆட்சியின் யோக்கியதை என்பதைப் பார்த்தீர்களா?
இதே ஒன்றிய பி.ஜே.பி. ஆட்சியில்தான் ‘வியாபம்‘ ஊழல் சிரிப்பாய்ச் சிரித்தது. மருத்துவம் மற்றும் பொறியியல் நுழைவுத் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுதினார்கள் (2013 ஆம் ஆண்டு). பணம் பெற்றுக்கொண்டு தேர்வு எழுதிய ஆள் மாறாட்டக்காரர்களுக்குத்தான் இருக்கைகள் ஒதுக்கப்பட்டன என்றால், பார்த்துக் கொள்ளலாமே!
இதன்மீதான விசாரணை நடந்துகொண்டு இருந்தபோது, 45 பேர் தற்கொலை செய்துகொண்டனர், ஆளுநரின் மகன் உள்பட!
இந்த ‘உத்தமப் புத்திர சிகாமணிகள்‘தான் ஊழலின் உறை விடம் காங்கிரஸ் என்றும், ஊழலைப்பற்றி பி.ஜே.பி.யை நோக்கி விரலை நீட்ட முடியுமா? என்றும் வீராப்புப் பேசுகிறார்கள்!
வெட்கக்கேடு!