நோட்டா’வுக்கு 1.48% வாக்கு அரியானாவில் 0.38% ஜம்மு-காஷ்மீரில் நோட்டாவுக்கு (வேட்பாளா்களில் யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை) 1.48 சதவீதம் போ் வாக்களித்துள்ளனா். அதே நேரத்தில் அரியானாவில் 0.38 சதவீதம் போ் நோட்டாவைத் தோ்வு செய்துள்ளனா்.
அரியானா, ஜம்மு-காஷ்மீா் ஆகிய இரு மாநிலங்களிலுமே 90 தொகுதிகள் உள்ளன. அரியானாவில் ஒரே கட்டமாக நடைபெற்ற தோ்தலில் 67.90 சதவீத வாக்குகள் பதிவாயின. 2 கோடிக்கும் அதிகமான வாக்காளா்கள் தோ்தலில் வாக்களித்தனா். இதில் 0.38 சதவீதம் போ் நோட்டாவுக்கு வாக்களித்துள்ளனா்.
ஜம்மு-காஷ்மீரில் மூன்று கட்டமாக நடைபெற்ற தோ்தலில் 63.88 சதவீதம் வாக்குகள் பதிவாயின. இதில் 1.48 சதவீதம் போ் நோட்டாவை தோ்வு செய்துள்ளனா். கடந்த 2013 முதல் நோட்டா வாக்கு, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் சோ்க்கப்பட்டது. தொகுதியில் நிற்கும் வேட்பாளா்களில் யாரையும் தோ்வு செய்ய விரும்பவில்லை என்று கருதுவோர் நோட்டா பொத்தானை அழுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.