தென் சென்னை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் டிவிட்டரில் வாழ்த்து
2023-ஆம் ஆண்டிற்கான “தகைசால் தமிழர் விருதிற்கு” அறிவிக்கப்பட்டுள்ள மானமிகு @AsiriyarKV அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
பத்து வயதில் தொடங்கி, 90 வயதிலும் சுறுசுறுப்பான சுயமரியாதை இளைஞராய் இன்றும் இன, மொழி எழுச்சி யோடு வலம் வரும் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு ஆசிரியருக்கு இவ்விருதினை அறிவித்த கழகத் தலைவர் – மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி!
💥
விழுப்புரம் மக்களவை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் துரை.ரவிக்குமார் டிவிட்டரில் வாழ்த்து
தமிழ்நாடு அரசின் தகைசால் தமிழர் விருதுக்குத் தேர்வுசெய்யப்பட்டிருக்கும் அய்யா ஆசிரியர் @AsiriyarKV அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். தேர்வு செய்த மாண்புமிகு @CMOTamilnadu அவர்களுக்கு நன்றி!
💥
முரசொலி செல்வம். கவிப்பேரரசு வைரமுத்து ஆகியோர் தொலைப்பேசியில் வாழ்த்து
“தகைசால் தமிழர்” விருது பெற்றுள்ள தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு முரசொலி செல்வம். கவிப்பேரரசு வைரமுத்து, மேனாள் காவல்துறை தலைமை இயக்குநர் வைகுந்த் அய்.பி.எஸ்., உள்ளிட்டோர் தொலைப்பேசி வாயிலாகத் தங்கள் மகிழ்ச்சி யையும், வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.
💥
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் வாழ்த்து
தமிழ்நாடு அரசின் ‘தகைசால் தமிழர்’ விருது பெற்றுள்ள மானமிகு ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.