கோவா, அக். 8- கத்தோ லிக்க கிறித்துவ மதத்தை இந்தி யாவில் பரப்பியவா்களில் முக்கிய மானவரான ஸ்பெயினை சோ்ந்த புனித பிரான்சிஸ் சேவியரின் உடல் கோவாவில் பதப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட கால இடைவெளியில் அந்த உடல் மக்களுக்கு பார்வைக்கு வைக்கப் படுகிறது. அப்போது, ஏராளமான கிறித்துவா்கள் அவரின் உடலை வணங்கி வருகின்றனா்.
கோவாவில் உள்ள கத்தோலிக்க கிறித்துவா்கள் அவரை ‘கோவாவின் கடவுள்’ என்றும் அழைக்கின்றனா். அடுத்த மாதம் உடல் பார்வைக்கு வைக்கப்படவுள்ள நிலையில், அந்த உடலுக்கு டிஎன்ஏ பரிசோதனை செய்ய வேண்டும் என்று கோவா வைச் சோ்ந்த ஆா்எஸ்எஸ் தலைவா் பாஸ்கா் வெலிங்கா் கூறியது சா்ச்சை ஏற்படுத்தியது.
இதற்கு எதிராக கத்தோலிக்க கிறித்துவா்கள் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டத்தில் ஈடு பட்டு வருகின்றனா். பாஸ்கா் வெலிங்கா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதையடுத்து அவா் தலைமறைவாகிவிட்டார்.
இந்நிலையில், இந்த பிரச் சினையை சுட்டிக்காட்டி ராகுல் காந்தி ‘எக்ஸ்’ வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘கோவா இயற்கை எழில் மிகுந்த இடம். அங்கு பல்வேறு தரப்பு மக்கள் மத நல்லிணக்கத்துடன் வாழ்ந்து வருகின்றனா். விருந்தினா்களை உபசரிப்பதில் கோவா தனிச்சிறப்பு வாய்ந்தது.
ஆனால், கெட்ட வாய்ப்பாக அங்கு பாஜக ஆட்சியில் உள்ளது. எனவே, மத நல்லிணக்கம் தாக்கு தலுக்கு உள்ளாகிறது. பாஜக மற்றும் அதைச் சோ்ந்தவா்கள் திட்டமிட்டே மத வன்முறையைத் தூண்டுகின்றனா்.
ஆா்எஸ்எஸ் தலைவா் கிறித்துவா் களைத் தூண்டிவிடுகிறார். மறுபுறம் முஸ்லிம்களை பொருளாதாரரீதியாக புறக்கணிக்க வேண்டும் என்று சங் பரிவார் அமைப்புகள் பிரச்சாரம் செய்கின்றன.
இந்தியா முழுவதுமே இது போன்ற மதநல்லிணக்கத்தைச் சீா்குலைக்கும் நடவடிக்கைகளில் பாஜகவினா் இறங்கியுள்ளனா்.
நாட்டு மக்கள் பாஜகவின் இந்த சதி வலையில் சிக்கிவிடக் கூடாது. பிரிவினையைத் தூண்டுபவா்களைப் புறக்கணித்து அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்’ என்று பதிவிட்டுள்ளார்.