சிதம்பரம், அக். 6- சிதம்பரம் மாவட்ட கழகம் சார்பில் 17.9.2024 அன்று மாலை 5.30 மணிக்கு, தந்தை பெரியார் பட ஊவலம், சிதம்பரம் கீழவீதி காமராசர் நிலையில் புறப்பட்டு, பொதுக்கூட்டம் நடைபெறும் இடமான காந்தியார் சிலை அடைந்தது. ஊர்வலத்தில், தந்தை பெரியார் வாழ்க! அன்னை மணியம்மையார் வாழ்க! தமிழர் தலைவர் வாழ்க! என்ற முழக்கங்கள் எழுப்பப்பட்டன. தந்தை பெரியார் படம் திறந்த ‘ஜீப்’பில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது.
ஊர்வலத்தில் மாவட்டத் தலைவர் பேராசிரியர் பூ.சி.இளங்கோவன், மாவட்டத் துணைத் தலைவர் கோவி.பெரியார்தாசன், மாவட்ட இணைச் செயலர் யாழ்.திலீபன், பொதுக்குழு உறுப்பினர் சுமதி பெரியார்தாசன், மகளிர் பாசறை யாழ்.சுபா, காட்டுமன்னார்குடி ஒன்றிய செயலாளர் ப.முருகன், மாவட்ட இளைஞரணி தலைவர் சிற்பி.சிலம்பரசன், மாவட்ட இளைஞரணி செயலர் பஞ்சநாதன், பெரியார் படிப்பக துணைத் தலைவர் ஆறு.கலைச்செல்வன், திருமுட்டம் ஒன்றியத் தலைவர் க.பெரியண்ணசாமி, மாவட்ட ப.க. தலைவர் கோவி.நெடுமாறன், காட்டமன்னார்குடி ஒன்றிய அமைப்பாளர் சண்முகசுந்தரம், மாவட்ட ப.க. செயலர் செங்குட்டுவன், மாவட்ட அமைப்பாளர் கு.தென்னவன், சிதம்பரம் நகர தலைவர் கோவி.குணசேகரன், சிதம்பரம் நகர செயலாளர் இரா.பொய்யாமொழி, நகர அமைப்பாளர் இரா.செல்வரத்தினம், சாலியந்தோப்பு தி.லெனின், கீரப்பாளையம் கதிர வன், பெருமாத்தூர் இராமலிங்கம், பெரியார் பிஞ்சு தமிழினியன், வலசக்காடு ஆர்.வீரமணி ஆகியோர் கலந்து கொண்டார்.
பெரியார் பட ஊர்வலம் சுமார் அரைமணி நேரம் நடைபெற்று, மாலை 6 மணிக்கு பொதுக்கூட்ட மேடையை அடைந்தது.
பொதுக்கூட்டம்
தந்தை பெரியா 146ஆவது பிறந்த நாள் பொதுக்கூட்டம் மாலை 6.15 மணியளவில் தொடங்கியது. மாவட்ட செயலாளர் அன்பு.சித்தார்த்தன் வரவேற்புரையாற்றினார். மாவட்டத் தலைவர் பேராசிரியர் பூ.சி.இளங்கோவன் தலைமையேற்றார்.
நிகழ்ச்சியில் மாவட்டத் துணைத் தலைவர் கோவி.பெரியார் தாசன், பெரியார்பிஞ்சு யாழ் திலீபனின் பேரன் தமிழினியன், திமுக நகர்மன்ற உறுப்பினர் ரா.வெங்கடேசன், நகர்மன்ற திமுக உறுப்பினர் வி.என்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட மதிமுக செயலர் எ.என்.குணசேகரன், மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் துணைச் யெலாளர் வி.எம்.சேகர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நகர செயலாளர் எஸ்.இராசா ஆகியோர் உரையாற்றிய பின்னர், சிறப்புரையாற்றிய மாநில மதிமக பொருளாளர் மு.செந்திலதிபன் தன் உரையில்…
நீதிக்கட்சித் தொடங்கி, தற்பொழுது நடைபெறும் திராவிட மாடல் ஆட்சி வரை தந்தை பெரியாரின் இடஒதுக்கீடு குறித்து விரிவாக எடுத்து வைத்தார். தமிழ்நாட்டு வரலாற்றில் தந்தை பெரியாரின் பெயரை விடுத்து யாரும் வரலாறு எழுத முடியாது. சென்னை மாகாண முதலமைச்சராக, ராஜாஜி இருந்தபோது, தந்தை பெரியாரை பெல்லாரி சிறையிலடைத்தார். இதுகுறித்து சட்டமன்றத்தில் கேட்டபொழுது, “என் நண்பர் ஈ.வெ.ரா.வுக்கு பெல்லாரி வெயில் ஒத்துக்கொள்ளும்” என்று ஆணவத்தோடு கூறினார்.
1967இல் அறிஞர் அண்ணா தமிழ்நாட்டுத் தேர்தலில் வெற்றி பெற்றவுடன், கீழ்ப்பாக்கத்திலிருந்த ராஜாஜியை சந்திக்கவில்லை. திருச்சியிலிருந்த தந்தை பெரியாரைத் தேடிச் சென்று சந்தித்து, தான் அமைக்கப்போகும் அரசுக்கு ஆதரவு கேட்டார். இதுதான் திராவிட இயக்கத்தின் திருப்பு முனையாகும். ஒருவேளை அண்ணா பெரியாரைத் தேடிப் போகாமல், ராஜாஜியிடம் சென்றிருந்தால், இன்றைய சூழலே மாறியிருக்கும். பெரியாரிடம் ஆதரவு கேட்டது மட்டுமல்ல. இந்த அரசையே பெரியாருக்கு காணிக்கை ஆக்குகிறேன் என்றார் அண்ணா. எனவேதான் இன்றளவும் மதவாத ஆர்.எஸ்.எஸ். சக்திகள், தமிழ்நாட்டில் எவ்வளவு முயன்றும் காலூன்ற முடியவில்லை. மற்ற மாநிலங்களில் செல்லுபடியாகும் – விற்பனையாகும் ஆர்.எஸ்.எஸ். திட்டங்கள் தமிழ்நாட்டில் தோல்வியடையக் காரணம் இது ‘பெரியார் மண்’.
தமிழ்நாட்டில் எந்தக் கட்சி தொடங்கப்பட்டாலும், பெரியார் பெயர் இல்லாமல், பெரியாரியல் கருத்தில்லாமல் – அக்கட்சிகள் வெற்றிபெற முடியாது. எனவேதான், புதிதாக கட்சி தொடங்கியுள்ள திரைக்கலைஞர் விஜய், தந்தை பெரியார் சிலைக்கு வந்து பெரியார் திடலுக்கு வந்து மரியாதை செலுத்தியுள்ளார். இச்செயலைக் கண்டு சங்கிகள் கூட்டம் பதறுகிறது. இதுதான் பெரியாரின், வெற்றியாகும் என்று நீண்டதொரு விளக்க உரையாற்றினார்.
நிகழ்ச்சியில், மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்தும், கழகத் தோழர்கள், மதிமுக வழக்குரைஞர் கே.வி.மோகனசுந்தரம், மதிமக நகர செயலர் டிங்கர் குமார், மதிமுக மாவட்ட துணை செயலர் பார்த்தீபன், மதிமுக இளைஞணி இராச.எழிலன், மேனாள் செயலர் பாலு, சி.பி.அய். நகர செயலர் தமுமுன் அன்சாரி, அண்ணாமலை நகர் பேருராட்சித் துணைத் தலைவர் வி.தமிழ்செல்வி விஜயகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சிதம்பரம் நகர செயலாளர் இரா.பொய்யாமொழி நன்றி கூறினார்.