புதுடில்லி, அக்.4 புகார்தாரரிடம் ரூ.20 லட்சம் லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் தேசிய புலனாய்வு முகமையின் (என்.அய்.ஏ.) மூத்த அதிகாரி மற்றும் இரண்டு இடைத்தரகா்களை ஒன்றிய புலனாய்வு அமைப்பு (சி.பி.அய்.) நேற்று (3.10.2024) கைது செய்தது.
ரூ.20 லட்சம் லஞ்சம் கேட்டதாக என்.அய்.ஏ. விசாரணை அதிகாரி மீது ராமையா கட்டட நிறுவனத்தின் உரிமையாளா் ராக்கி யாதவ் சி.பி.அய்.யிடம் புகாரளித்தார்.
இதையடுத்து, என்அய்ஏ அதிகாரிகளுடன் இணைந்து இந்த புகாரின் உண்மைத்தன்மையை கண்டறிய சி.பி.அய். முடிவு செய்தது. இந்நிலையில், அவரை கையும் களவுமாக பிடிக்க சிபிஅய் தீட்டிய திட்டத்தில் என்.அய்.ஏ. பாட்னா கிளை அலுவலக துணை காவல் கண்காணிப்பாளா் அஜய் பிரதாப் சிங் மற்றும் இரண்டு இடைத்தரகா்களும் சிக்கினா்.
இதைத்தொடா்ந்து, புகார்தாரரிடம் சட்டவிரோதமாக ரூ.20 லட்சம் பெற்றதற்காக மூவரும் கைது செய்யப்பட்டதாக சி.பி.அய். தெரிவித்தது.