காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவர்கள்மீது வேண்டுமென்றே தொடுக்கப்பட்ட அவதூறு வழக்கில் அதிகபட்ச தண்டனையாக 2 ஆண்டுகள் வழங்கியது குறித்து கேள்வி எழுப்பியுள்ள உச்சநீதிமன்றம், அந்தத் தண்ட னையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டிருப்பது வரவேற்கத்தகுந்த ஒன்றாகும்.
உச்சநீதிமன்றத்தின் தடை என்பது நல்ல தீர்ப்பு என்பது மட்டுமல்ல; நெரிக்கப்பட்ட இந்திய ஜனநாயகத்தினைக் காப்பாற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவும் ஆகும்.
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
4.8.2023