நிலைப்பாட்டில் தெளிவு!

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

ஜாதிவாரி கணக்கெடுப்பு தேவை என்ற நிலைப்பாட்டில் நாங்கள் தெளிவாக உள்ளோம். அரசு கொள்கைகள் பல ஜாதிகளின் அடிப்படையில் உருவாக்கப்படுகின்றன. அந்தந்த சமுதாய மக்களின் எண்ணிக்கை குறித்த தகவல் இருந்தால், அதன் அடிப்படையில் நிதி ஒதுக்கலாம்.
– சிராக் பஸ்வான், ஒன்றிய அமைச்சர், லோக் ஜனசக்தி

அனைத்து மத பெண்களுக்கும்
குடும்ப வன்முறை சட்டம் பொருந்தும்

புதுடில்லி, செப். 28- ‘குடும்ப வன்முறைச் சட்டப் பாதுகாப்பு, மதம், சமூக பின்புலங்களுக்கு அப்பாற்பட்டு, நாடு முழுவதும் உள்ள அனைத்து பெண்களுக்கும் பொருந் தும்’ என, உச்சநீதிமன்றம் ஒரு வழக்கில் குறிப்பிட்டுள்ளது.

கருநாடகாவைச் சேர்ந்த ஒரு பெண் வாழ்வூதியம் கேட்டு தொடர்ந்த வழக்கில், உயர் நீதிமன்றம் அளித்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத் தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதை விசாரித்த நீதிபதிகள் பி.வி.நாகரத்தினா, கோட்டீஸ்வர் சிங் அடங்கிய அமர்வு தன் உத்தரவில் கூறியுள்ளதாவது:

குடும்ப வன்முறைச் சட் டம் – 2005 என்பது, பெண் களை குடும்ப வன்முறைகளில் இருந்து பாதுகாக்கும் சட்டமாகும். பாதிக்கப்பட்டவர் எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், எந்த சமூக பின்புலத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், நாடு முழுவதும் உள்ள அனைத்து பெண்களுக்கும் இந்தச் சட்டம் பொருந்தும்.

அதன்படி, இந்த பெண் தொடர்ந்த வழக்கை விசாரணை நீதிமன்றம் விசாரிக்க வேண்டும். -இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

குரூப் 2 முடிவுகள்: டிசம்பரில் வெளியீடு

சென்னை, செப். 28- தமிழ்நாடு அரசுத் துறைகளில் குரூப் 2, 2ஏ பதவிகளில் உள்ள 2,327 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான முதல்நிலைத் தேர்வு செப்டம்பர் 14ஆம் தேதி மாநிலம் முழுவதும் நடைபெற்றது.

இந்த தேர்வை 5 லட்சத்து 81,305 பட்டதாரிகள் எழுதினர். அதைத் தொடர்ந்து குரூப் 2 தேர்வுக்கான விடைக் குறிப்பு (கீ ஆன்சர்) செப்டம்பர் 23ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதன் மீதான ஆட்சேபனைகளை தெரிவிக்க செப்.30ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குரூப் 2, 2ஏ முதல்நிலைத் தேர்வுக்கான முடிவுகள் டிசம்பரில் வெளியாகும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அறிவிப்பில், ‘‘குரூப் 2, 2ஏ முதல்நிலைத் தேர்வுக்கான முடிவுகளை டிசம்பர் மாதம் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து 2025ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் குரூப் 2, 2ஏ பதவிக்கான முதன்மைத் தேர்வு (மெயின்) நடைபெறும். இதேபோல், ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளுக்கான தேர்வு முடிவுகள் நவம்பர் மாதம் வெளியாகும்’’ என்று அதில் கூறப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *