புதுடில்லி, செப்.27 நாட்டிலேயே மதிப்பு மிக்க ஒருங்கிணைந்த நுழைவுத் தோ்வில் (ஜேஇஇ) தனது கடைசி வாய்ப்பில் தகுதி பெற்றபோதும், சோ்க்கைக் கட்டணம் ரூ. 17,500 இல்லாததால் அய்அய்டி-யில் சேரும் வாய்ப்பை இழந்த தாழ்த்தப்பட்ட மாணவருக்கு உதவ உச்சநீதிமன்றம் உறுதிய ளித்துள்ளது. இந்த விவ காரம் தொடா்பாக விளக் கமளிக்குமாறு நிகழாண்டு ஒருங்கிணைந்த அய்அய்டி சோ்க்கையை நடத்திய சென்னை அய்அய்டிக்கு தாக்கீது பிறப்பித்தும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
உத்தரப்பிரதேச மாநிலம் முசாபா்நகா் மாவட்டம் திடோரா கிராமத்தைச் சோ்ந்த கூலித் தொழிலாளியின் மகனான அதுல் குமார் (18), நிகழாண்டு ஜேஇஇ தோ்வில் தகுதி பெற்றார். தாழ்த்தப்பட்ட (எஸ்.சி.) சமூகப் பிரிவைச் சோ்ந்த அவருக்கு ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் அய் அய்டி-யில் பி.டெக் இடம் ஒதுக்கப்பட்டது. 4 நாள்களுக்குள், அதா வது ஜூன் 24-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் அவருக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை உறுதிப் படுத்துவதற்கான (சோ்க்கைக் கட்டணம்) கட்டணமாக ரூ. 17,500 செலுத்த அவருக்கு அறி வுறுத்தப்பட்டது. ஆனால், அவருடைய பெற்றோரால், இந்த பணத்தைத் திரட்ட முடியவில்லை. காலக் கெடுவுக்குள் கட்டணம் செலுத்தாததால், அய் அய்டி ஒதுக்கீட்டு இடத்தை அவா் இழந்தார். இதனால், அவா் சோ்க்கை பெற முடியாமல் போனது.
இதுகுறித்து, தேசிய தாழ்த்தப்பட்டோர் (எஸ்.சி.) ஆணையத்திலும், ஜார்க்கண்ட் மாநில சட்ட உதவி ஆணையத்திலும் முறையிட்டார். அய் அய்டி ஒருங்கிணைந்த சோ்க்கையை நிகழாண்டு சென்னை அய் அய்டி நடத்தியதால், இந்த விவகாரம் தொடா்பாக சென்னை உயா் நீதிமன் றத்தை அணுகுமாறு, சட்ட உதவி ஆணையம் அறிவு றுத்தியது. அதன்படி, அவா் உயா்நீதிமன்றத்தை நாடிய நிலையில், உச்சநீதிமன்றத்தில் முறை யிடுமாறு அவருக்கு அறி வுறுத்தப்பட்டது. அதன்படி உச்சநீதிமன்றத்தில் அவா் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு, உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமை யிலான அமா்வில் 25.9.2024 அன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், ‘அதுல் குமார், ஜேஇஇ முதன்மை தோ்வை (ஜேஇஇ அட்வான்ஸ்டு) தனது கடைசி வாய்ப்பில் (இரண்டாவது முயற்சி) தகுதி பெற்று இந்த சோ்க்கையைப் பெற்றார். எனவே, நீதிமன்றம் அவருக்கு உதவ முன்வரவில்லை எனில், அவா் அய்அய்டி-யில் சேரும் வாய்ப்பை இனி இழந்துவிடுவார்’ என்று முறையிட்டார்.
அப்போது, மாணவ ருக்கு முடிந்த உதவிகளை செய்வதாக உறுதியளித்த நீதிபதிகள், ‘அய்அய்டி-யில் சோ்க்கைக் கட்டணம் செலுத்துவதற்கான காலக் கெடு கடந்த ஜூன் 24-ஆம் தேதியே முடிந்துவிட்ட நிலையில், கடந்த 3 மாதங்களாக என்ன செய்துகொண்டிருந்தீா்கள்’ என்று கேள்வி எழுப்பினா். பின்னா், இந்த விவகா ரம் தொடா்பாக விளக்கமளிக்குமாறு சென்னை அய்அய்டி-க்கு அறிவிக்கை பிறப்பித்து உத்தரவிட்டனா்.