சென்னை, செப்.23 தனியார் நிறுவனத்துடன் இணைந்து அரசு பேருந்துகளில் சரக்கு போக்குவரத்து சேவை தொடங்கப்பட இருப்பதாக போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. இந்தத் திட்டத்தை மேற்கொள்ள, அரசு பல்லவன் போக்குவரத்து அறிவுரைப் பணிக்குழு நிறுவனத்தை ஒருங்கிணைப்பாளராக நியமித்துள்ளது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் இழப்பில் இயங்கி வருகின்றன. எனினும், மகளிருக்கு இலவச பேருந்து, முதியோர்களுக்கு இலவச பேருந்து அட்டை, மாணவர்களுக்கு இலவச பயணம் என திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த இழப்புகளைச் சமாளிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு பல்வேறு அதிரடி திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. அதன்படி விழாக்களில் கலந்து கொள்வதற்கும், சுற்றுலா தளங்களுக்கு செல்லவும் ஒப்பந்த ஊர்தி உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், தனியார் நிறுவனத்துடன் இணைந்து அரசு பேருந்துகளில் சரக்கு போக்குவரத்து சேவையை தொடங்க உள்ளது.