சிந்துவெளி அகழாய்வுகள் மூலம் திராவிடர்களின் தொன்மை வரலாற்றை வெளிப்படுத்திய சர் ஜான் மார்ஷலின் ஆய்வு நூற்றாண்டு ஆகிய தந்தை பெரியார் – நமது இயக்கம் தொடர்புடைய நூற்றாண்டு விழாக்கள் அடுத்தடுத்து வரும் நிலையில், அவற்றின் அடிப்படை நோக்கம் – ஜாதி – தீண்டாமை ஒழிந்து சமத்துவ சமுதாயம் அமைக்கும் பணியில் வெற்றி காண்பதற்கான தந்தை பெரியாரின் தொடர் போராட்டம், போர்க்குணம் – இவற்றின் உள்ளடக்கம், முக்கிய அம்சங்கள் தியாகச் சுவடுகள் – இவற்றால் ஏற்பட்ட சமூக மாற்றங்களை மக்கள் மத்தியில் – குறிப்பாக, சிறப்பாக இளைய தலைமுறையினரிடம் கொண்டு செல்வதற்கான முன் முயற்சித் திட்டங்களை வகுத்து, வெகு மக்களைப் பெரும் அளவில் ஈர்க்கும் வகையிலும் – இவற்றின் தாக்கம் அனைத்து மாநிலங்களிலும் பரவும் வண்ணமும் சிறப்பாக நடத்துவது என்றும் வரலாற்றையே புரட்டிப் போட்ட இந்த நிகழ்வுகள் நமது இயக்க வரலாற்றில் முதன்மையானதும் மிக மிக முக்கியமானதும் திராவிட சித்தாந்தத்தின் தனித் தன்மையும் உடையது என்ற காரணத்தால் நமது தோழர்கள் பெரும் அளவில் ஒத்துழைப்புத் தந்து வரலாறு போற்றும் விழாக்களாக இவற்றை நடத்துவது என்று இப்பொதுக்குழு உணர்ச்சிப் பெருக்கோடு தீர்மானிக்கிறது.
13.5.2023 அன்று ஈரோடு மல்லிகை அரங்கில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்