புதுடில்லி, செப் 16 நாடு முழுவதும் விரைவில் மக்கள்தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 1981-ஆம் ஆண்டுமுதல் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள்தொகை கணக்கெடுப்பை ஒன்றிய அரசு மேற்கொண்டு வந்தது. கடந்த 2020-ஆம் ஆண்டு ஏப்.1-ஆம் தேதி மக்கள் தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டத்தை தொடங்க திட்டமிடப்பட்டது. ஆனால் கரோனா பரவல் காரணமாக அந்தப் பணியை ஒன்றிய அரசு ஒத்தி வைத்தது. மக்கள்தொகை கணக்கெடுப்பு குறித்த புதிய தரவுகள் இல்லாததால், 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில், அரசு துறைகள் கொள்கைகளை வகுத்து மானியங்களை ஒதுக்கீடு செய்து வருகின்றன.
இந்நிலையில் ஒன்றிய அரசு அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘நாடு முழுவதும் விரைவில் மக்கள்தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட உள்ளது. அதற்கான முன்னேற்பாடுகளை ஒன்றிய அரசு தொடங்கியுள்ளது. ஆனால் இந்தக் கணக்கெ டுப்பின் ஒரு பகுதியாக ஜாதிவாரி கணக்கெடுப்பு மேற் கொள்வது குறித்து முடிவு எடுக் கப்படவில்லை’ என்றார்.
ஜாதிவாரி கணக்கெடுப்பை மேற்கொள்ள காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலி யுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.