வழக்குரைஞர் இந்திரா ஜெய்சிங்கின் ஆறு கேள்விகள்
புதுடில்லி, செப்.15 உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியின் வீட்டில் நடை பெற்ற விநாயகன் சதுர்த்தி விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றதும் அதை பா.ஜ.க.வினரே ஒளிப்படம் மற்றும் காணொலி எடுத்துப் பரப்பியதும் இப்போது விமர்சனத்துக்கு ஆளா கியிருக்கிறது. அதைப்பற்றி மூத்த வழக்குரைஞர் இந்திரா ஜெய்சிங் எழுதியுள்ள கட்டுரையில் எழுப்பியுள்ள 6 கேள்விகள் முக்கிய மானவையாகும்.
1. யாருடைய அழைப்பின் பேரில் பிரதமர் தலைமை நீதிபதியின் இல்லத்திற்குச் சென்றார்?
2. குடியரசுத் தலைவர் உள்ளிட்ட மற்ற அரசமைப்புச் சட்ட நிர்வாகிகள் ஏன் வரவில்லை? அவர்கள் அழைக்கப்பட்டார்களா?
3.தலைமை நீதிபதியின் இரண்டாண்டு பதவிக் காலத்தில், சமூக மற்றும் மத நிகழ்ச்சிகளுக்காக அவர் எத்தனை முறை பிரதமரைத் தனிப்பட்ட முறையில் சந்தித்துள்ளார்?
4. தனிப்பட்ட அந்த மதச் சடங்கு ஏன் ஒளிப்படம் எடுப்பதற்கான வாய்ப்பாகப் பயன்படுத்தப்பட்டது?
5.மகாராட்டிரா மாநிலத் தேர்தல் வரவிருக்கும் நிலையில், மகாராட்டிர சின்னமான தொப்பி அணிவதற்குத் தலைமை நீதிபதி விட்டுக் கொடுத்தாரா?
6.ஹிந்து சின்னங்கள், பாடல் கள் மற்றும் சடங்குகளின் இந்த வெளிப்படையான காட்சிப்ப டுத்துதலைக் கருத்தில் கொண்டு பார்த்தால், ஹிந்து அல்லாத வழக்காடிகள் தலைமை நீதிபதியிடமிருந்து இனி பாரபட்சமற்ற நீதியை எதிர்பார்க்க முடியுமா?
இந்த ஆறு கேள்விகளுக்கும் பிரதமரும், தலைமை நீதிபதியும் பதில் சொல்லக் கடமைப்பட்டவர்கள்.
இந்தக் கேள்விகள் மதச்சார் பின்மையை உயர்த்திப் பிடிக்க வேண்டிய மக்கள் பிரதிநிதிகள் அனை வருக்குமே பொருந்தக் கூடியவை.
‘‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’’ ஆங்கிலப் பதிப்பின் சுருக்கம் (13.09.2024)