புதுடில்லி, செப்.9 இந்தியாவில் அனைத்துமே டிஜிட்டல் மயமாகி விட்ட நிலையில், பொது மக்கள் மத்தியில் இணையவழி பண பரிவர்த்தனைகள் என்பது பெருமளவில் சகஜமாகி விட்டது. இதனால் கூகுள் பே, போன் பே போன்ற ‘ஆன்லைன் பேமண்ட்’ செயலிகள் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்து விட்டன. மேலும், பண பரிவர்த்தனைகள் பெருமளவில் குறைந்து விட்டன.
இந்தியாவில் பிரபலமான இணைய தள பண பரிவர்த்தனை செயலிகளாக கூகுள் பே மற்றும் போன் பே ஆகிய இரண்டு ஆப்களும் உள்ளன. ஒட்டு மொத்த UPI அடிப்படையிலான பரிவர்த் தனைகளில் 85 சதவீத பங்கு களை வைத்துள்ளன இந்த செயலிகள். இந்நிலையில் ரூ.2000 வரையிலான டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளுக்கு ஜிஎஸ்டி வரி அதிகரிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
54 ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட் டம் இன்று (9.9.2024) நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடை பெறுகிறது. அப்போது கூகுள் பே, போன் பே போன்ற செயலிகள் மூலமாக ரூ.2000 வரை மக்கள் மேற்கொள்ளும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளுக்கு ஜிஎஸ்டி வரி விதிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த வரி இடைத்தரக நிறுவனங் களான கூகுள் பே, போன் பே போன்ற வற்றிடம் இருந்து பெறப் பட உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இந்நிறுவனங்கள் வாடிக்கையாளர்களிடம் இருந்து வரியை வசூலிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்ெகனவே கூகுள் பே, போன் பே போன்றவை மூலமாக ‘ரீசார்ஜ், பில்’ கட்டணங்கள் செலுத்தும் போது வாடிக்கையாளர் களிடம் வரி வசூலிக்கப்படுகிறது.
இந்நிலையில் தற்போது ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்பட்டால் கூகுள் பே, போன் பே நிறுவனங்கள் புதிய முடிவை எடுக்கலாம் என கூறப்படுகிறது. இந்நிறுவனங்கள் ஜிஎஸ்டி பிட்மென்ட் கமிட்டியின் பரிந்துரைகள் படி இடைத்தரகர்களாக செயல்படுகின்றன. இந்த நிறுவனங்களுக்கும், வங்கிகளுக்கும் சம்பந்தம் கிடையாது. தற்போது ஜிஎஸ்டி விதியின்படி, இடைத்தரகராக நிறுவனங்களிடம் வரி விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
முன்னதாக டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளை மக்களிடம் ஊக்குவிக்கும் விதமாக, ரூ.2000க்கும் குறைவான பரிவர்த்தனைகளுக்கு வரி கிடையாது என அரசு தெரிவித்து இருந்தது. இதனால் வாடிக்கையாளர்களிடம் வரி வசூலிக்கப் படாமல் இருந்தது. ஆனால், தற்போது டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகள் எல்லா இடங்களிலும் சகஜமாகி விட்டதால், ஜிஎஸ்டி வரியை அமல்படுத்தப் போவதாக கூறப்படுகிறது. எனவே, ரூ.2000-க்கும் குறைவான பரிவர்த் தனைகளுக்கும் இந்தாண்டு முதல் வரி விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப் படுகிறது.