முஸ்லிம்களுக்கு எதிரான பேச்சு பா.ஜ., சட்டமன்ற உறுப்பினர்மீது வழக்கு

Viduthalai
1 Min Read

தானே, செப்.6- ‘மசூதிக்குள் நுழைந்து முஸ்லிம்களை தாக்குவோம்’ என மிரட்டியதாக மகாராட்டிரா பா.ஜ., – சட்டமன்ற உறுப்பினர் நிதேஷ் ரானே மீது, காவல்துறையினர் 4.9.2024 அன்று வழக்கு பதிவு செய்தனர்.
மகாராட்டிராவில் முதலமைச் சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் பா.ஜ., சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் (அஜீத் பவார்) கூட்டணி ஆட்சி நடக்கிறது.
இப்பகுதியைச் சேர்ந்த ஹிந்து மத தலைவர்களில் ஒருவர் மஹந்த் ராம்கிரி மகாராஜ். இவர் கடந்த மாதம் இசுலாம் மற்றும் நபிகள் நாயகம் குறித்து தரக்குறைவாக பேசியதாக சர்ச்சை எழுந்தது. இதனால், அவருக்கு மிரட்டல்கள் வரத் துவங்கின.
இந்நிலையில், பா.ஜ., – சட்டமன்ற உறுப்பினர் நிதேஷ் ரானே சமீபத்தில் ராம்கிரி மகா ராஜுக்கு ஆதரவாக அகமது நகர் மாவட்டத்தில் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார்.

அப்போது, ‘‘ராமகிரி மகா ராஜுக்கு எதிராக யாராவது ஏதாவது சொன்னால், நாங்கள் உங்கள் மசூதிக்குள் நுழைந்து ஒவ்வொருவராக அடிப்போம்; மனதில் வைத்துக் கொள்ளுங்கள்’’ என்று ஆவேசமாக பேசினார். இதன் காட்சிப் பதிவு சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதையடுத்து, பா.ஜ., – சட்ட மன்ற உறுப்பினர் நிதேஷ்மீது, வெறுப்புணர்வை துாண்டும் விதமாக பேசியது உட்பட இரண்டு பிரிவுகளின் கீழ் மகாராஷட்டிரா காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.
புல்டோசர் திருப்பி விடப்படும்!
எதிர்க்கட்சிகளை அடக்குவ தற்காக முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் புல்டோசர் வைத்து அப்பாவிகளின் வீடுகளை இடிக் கிறார். 2027 சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி வெற்றி பெற்றால், அனைத்து புல்டோசர்களும் யோகியின் கோட்டையான கோரக்பூருக்கு திருப்பி விடப்படும்.

–- அகிலேஷ்,
தலைவர், சமாஜ்வாதி

TAGGED:
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *