ஜம்மு, செப்.5– ராகுல்காந்தி, காஷ்மீர் சட்ட மன்ற தேர்தல் பிரச்சாரத்தை தொடங் கினார். அப்போது காஷ் மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்தை மீட்டு தருவோம் என்று அவர் கூறினார்.
காஷ்மீருக்கு சிறப்புத் தகுதியை அளிக்கும் 370ஆவது பிரிவு, கடந்த 2019ஆம் ஆண்டு ரத்து செய்யப் பட்டது. காஷ்மீரின் மாநில தகுதியும் பறிக்கப் பட்டது.
காஷ்மீர், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப் பட்டது. அதற்கு பிறகு முதல் முறையாக காஷ்மீர் சட்டமன்றத் தேர்தல் நடக்கிறது. இம்மாதம் 18ஆம் தேதி. 25ஆம் தேதி.அக்டோபர் 1ஆம் தேதி என 3 கட்டங் களாக தேர்தல் நடக்கிறது.
காஷ்மீர் சட்டமன்றத் தேர்தலில் தேசிய மாநாட்டு கட்சி காங்கிரஸ் கட்சி களுக்கிடையே கூட்டணி ஏற் பட்டுள்ளது. ஆனால், பனிஹல் உள்பட 5 தொகுதிக ளில் மட்டும் இரு கட்சிகளும் எதிர்த்து போட்டி யிடுகின்றன.
பிரசாரத்தை தொடங்கினார்
இந்நிலையில், காங்கிரஸ் மேனாள் தலைவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல்காந்தி நேற்று (4.9.2024) காஷ்மீர் சட்டசபை தேர்தல் பிரச் சாரத்தை தொடங்கினார்.
ரம்பன் மாவட்டம் பனிஹல் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சங்கல்டன் என்ற இடத்தில் நடந்த காங்கிரஸ் தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் அவர் பங்கேற்றார். இத்தொகுதி, 18ஆம் தேதி முதல் கட்ட தேர்தலை சந்திக்கும் 26 தொகுதிகளில் ஒன்றாகும்.
காஷ்மீர் காங்கிரஸ் கட்சி மேனாள் தலைவர் விகார் ரசூல் வானி, காங்கிரஸ் வேட்பாளராக களத்தில் இருக்கிறார். தேசிய மாநாட்டு கட்சி, பா.ஜனதா ஆகி யவை எதிர்முனையில் நிற்கின்றன.
மாநில தகுதி
பிரச்சார கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது:-
சட்டமன்ற தேர்தல் நடத்துவதற்கு முன்பே காஷ்மீருக்கு மீண்டும் மாநிலத் தகுதி கிடைக்க வேண்டும் என்று விரும்பினோம். ஆனால், பா.ஜனதா விரும்பவில்லை. தேர்தல்தான் முதலில் நடக்க வேண்டும் என்று விரும்பியது.
ஆனால், பா.ஜனதா விரும்பினாலும், விரும்பாவிட் டாலும் காஷ்மீருக்கு மீண்டும் மாநிலத் தகுதி கிடைப்பதை நாங்கள் உறுதி செய்வோம்.காங்கிரஸ் கட்சி, மற்ற ‘இந்தியா’ கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுத்து, மாநில தகுதி கிடைப்பதை உறுதி செய்யும்.
– இவ்வாறு அவர் பேசினார்.