சென்னை, செப்.4- கிளாம் பாக்கம் பேருந்து நிலையத்திற்கு வருகை புரிந்த வடஇந்தியர் ஒருவர்… மிகப்பெரிய அந்த பேருந்து நிலையத்தை பார்த்து வியந்து பாராட்டி உள்ளார்.
இது தொடர்பாக சிவம் ஜிண்டால் என்ற அந்த வடஇந்திய பொறியாளர் இதை பற்றி பதிவு செய்துள்ளார். அதில், முதன்முறையாக சென்னை வந்ததில் இருந்தே வியப்பாக இருக்கிறது.
தமிழ்நாட்டின் வளர்ச்சி பற்றி இவர்கள் கூறுவது உண்மை தான். வியப்பாக உள்ளது. கிளாம் பாக்கம் பேருந்து நிலையம் நான் பார்த்ததிலேயே மிகவும் ஒழுங் கமைக்கப்பட்ட மற்றும் வசதியான பேருந்து நிலையங்களில் ஒன்றாகும்; டில்லியின் ISBT-அய் விட சிறந்தது என்பது என் கருத்தாக உள்ளது என்று பாராட்டி உள்ளார்.
தற்போது கிளாம்பாக்கம் அருகே அசத்தலான மாற்றங்கள் நடந்து வருகின்றன. அங்கே கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் – ரயில் நிலையத்தை இணைக்கும் ஆகாய நடைபாதை அமைக்க டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு. நடைபாதை அமைக்கும் பணிகளை சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் மேற்கொள்ள உள்ளது. இதற்கான பணிகள் தொடங்கி உள்ளன. இதனால் இனி அங்கே பேருந்துகளுக்கு இடையே கிராஸ் செய்ய, நிற்க வேண்டிய அவசியம் இருக்காது.
கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தில் இருந்து பேருந்து நிலையத் தின் மய்யப் பகுதிக்கு 400 மீ நீளத்தில் ஆகாய நடைபாதை அமைக்கப்பட உள்ளது. இது வரை கோயம்பேடு வரை இயக் கப்பட்ட பேருந்துகள் இனி கிளாம்பாக்கம் கலைஞர் பேருந்து முனையத்தில் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில்தான் கிளாம்பாக்கத்தில் ரயில் நிலையம் கட்டும் பணி தமிழ்நாடு அரசு நிதியில் தொடங் கப்பட்டு உள்ளது.
வண்டலூர் மற்றும் ஊரப் பாக்கம் ரயில் நிலையங்களுக்கு இடையே, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை எதிர்கொள்ளும் ஜிஎஸ்டி சாலையில், புதிய ரயில் நிலையத்திற்கான கட்டடங்கள் மற்றும் நடைமேடைகள் கட்டுவதற்கான குடிமராமத்து பணி தொடங்கி உள்ளது. சில மாதங்களில் புதிய ரயில் நிலையம் தயாராகிவிடும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
மேலும், கிளாம்பாக்கம் டெர் மினஸை புதிய ரயில் நிலையத்துடன் இணைக்கும் வகையில் 450 மீட்டர் நீளமுள்ள ஸ்கைவாக்கிற்கான பணி இறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் ஸ்கைவாக் கட்டுவதற்கான நிலத்தை கையகப் படுத்துவதற்கான இறுதி அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. புதிய ரயில் நிலையத்தின் கட்டுமானச் செலவுக்காக, தெற்கு ரயில்வேக்கு, 20 கோடி ரூபாயை, மாநில அரசு ஏற்கெனவே மாற்றியது குறிப் பிடத்தக்கது.
பேருந்து நிலையம்: சென்னை உள்ளே வராமல் இனி கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தோடு இந்த பேருந்துகள் நிற்கும். முக்கியமாக கோயம்பேடு வரை இந்த பேருந்துகள் வராது. சென்னை உள்ளே வர இனி நீங்கள் வேறு பேருந்து பிடித்துதான் வர வேண்டும். இது தனியார் பேருந்துகளுக்கு பொருந்தாது.