புதுடில்லி, ஆக. 29- கிராமப்புறத்தைச் சேர்ந்தவர்களுக்கு வாழ்வாதாரத்துக்கான வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் கடந்த 2005-ஆம் ஆண்டு ஒன்றிய அரசால் கொண்டு வரப்பட்டது.
எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தரவு தளம், கடந்த நிதி ஆண்டில் (2023-2024)மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில்பெண்களின் பங்கேற்புதொடர்பாக மாநிலங்கள் வாரியான விவரத்தை வெளியிட்டுள்ளது.
அதில், 86.66 சதவீதம் பெற்று தமிழ்நாடு மிகச் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளது.
இதில் மிகவும் குறை வாக ஜம்மு – காஷ்மீர் 32.16 சதவீத பங்களிப்பு மட்டுமே கொடுத்திருக்கிறது.
கேரளா, புதுச்சேரி, தமிழ்நாடு மற்றும் கோவா ஆகிய 4 மாநிலங்கள் மட்டுமே 70 சதவீதத்துக்கு அதிகமான பெண்களின் பங்கேற்பினை தந்திருக்கின்றன.
50 முதல் 70 சதவீத பங்களிப்பினை 16 மாநிலங்களும், 50 சதவீதத்துக்குக் குறைவான பங்களிப்பினை 14 மாநிலங் களும் வழங்கியிருக்கின்றன.