மேட்டுப்பாளையம், ஆக.24- மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க நூற்றாண்டுவிழா எழுச்சியுடன் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்டசெயலாளர் கா.சு.அரங்கசாமி தலைமை தாங்கினார். மாவட்டதலைவர் சு. வேலுசாமி முன்னிைலை வகித்தார். நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கழக சொற்பொழிவாளர்கள் இரா. அன்புமதி,
க. வீரமணி, ஆகியோர் மூட நம்பிக்கை ஒழிப்பு, பெண்ணுரிமை பாதுகாப்பு குறித்து தெளிவாக உரையாற்றினார்கள்.
கூட்டத்தில் மாவட்ட இளைஞரணி செயலாளர் பிரதீப், லியாகத் அலி, ரங்கசாமி, மணி, ரங்கராஜ், ராமச்சந்திரன், மேட்டுப்பாளையம் நகர செயலாளர் கோ.அர.பழனிசாமி, தியாகராசன், முத்துச்சாமி, தமிழ்மணி, காரமடை ஒன்றியதலைவர் ஏ.எம்.ராஜா உள்ளிட்ட ஏராளமான கழகத் தோழர்கள் கலந்துகொண்டனர்.
மேட்டுப்பாளையம் மாவட்ட அமைப்பாளர் வீ.செல்வராஜ் நன்றி கூறினார்.