இப்போதெல்லாம் முன்னணி தொலைக்காட்சியினர் எதிர்க்கட்சித் தலைவர்கள் உள்ளிட்டவர்களைப் பேட்டி எடுக்கத் தகுதி இல்லாதவர்களாக நினைத்துவிட்டார்களோ என்னவோ! ஒன்று பாஜக தலைவர்கள், இல்லையென்றால், உள்ளூர் ஹிந்துத்துவ அமைப்பைச் சேர்ந்த நபர்கள், இல்லையென்றால் சாமியார்களை அழைத்துவந்து பேட்டி எடுக்கிறார்கள்.
பிரபல தனியார் செய்தி நிறுவனத்தின் முதன்மை
எடிட்டர் சுபாங்கர் மிஸ்ரா வடக்கே சாமியாராகக் கூறப்படும் விளம்பரம் பெற்ற அனிருத்தாச்சாரியா என்பவரை பேட்டி
கண்டார்.
பேட்டியின் நடுவே ஒரு எளிய கேள்விகேட்கப்பட்டது,
‘‘71-இல் 17 போனால் மீதம் எவ்வளவு இருக்கும்?’’ என்று.
அதற்கு அந்த சாமியார் நேரடியாக பதில் கூறாமல், எனது தந்தையும் இதே கேள்வியைத் தான் கேட்டார் என்று மழுப்பிக்கொண்டே, வேறு வேறு கதைகளைப் பேச ஆரம்பித்து விட்டார். கடைசி வரை அவர் 71-இல் 17 போனால் மீதம் எவ்வளவு என்ற எளிமையான கழித்தல் கணக்கிற்கு விடை கூறவே இல்லை.
இவரது ஆன்மீக சொற்பொழிவைக் கேட்க வெளிநாட்டில் இருந்தெல்லாம் வருகிறார்களாம்! ஹி… ஹி…