கருநாடகாவின் தென் பகுதி மற்றும் தென்மேற்கு பகுதிகளில் காணப்படும் நூற்றுக்கணக்கான கல்வெட்டுகள் நில மானியம் மற்றும் கிராமங்களை கட்டமைப்பது பற்றி பேசுகின்றன.
நவீன பெங்களூரு குறிப்பாக தெற்கு கருநாடகா நகர்ப்புறம் கெம்பே கவுடா என்ற நகர நிர்மாணியிடமிருந்து தொடங்குவதாகக் கூறப்படுகிறது, ஆனால் அவருக்கு முன்னரே பல நூற்றாண்டுகளாக இப்பகுதி கிராமங்கள் மற்றும் சிறிய நகரங்கள் கிராமப்புறங்களாக் பரவி இருந்தன. அவை ஹெப்பல் போன்ற சுற்றுப்புறங்களில் வாழும் பெயர்களாலும், இப்பகுதி முழுவதும் உள்ள நூற்றுக் கணக்கான பொறிக்கப்பட்ட கல்வெட்டுகளாலும் சான்றளிக்கப்படுகின்றன. ஆனால், இந்த கல்வெட்டுகள் பெங்களூருவில் வசிப்பவர்களில் பெரும்பாலோரை ஆச்சரியப்படுத்தலாம் – சுமார் 1,500 கல்வெட்டுகளில் மூன்றில் ஒரு பங்கு தமிழில் உள்ளன.
பெங்களூரு நகரம் முழுவதும் காணப்படும் பல்வேறு கல்வெட்டுக் கற்களை ஆவணப்படுத்தும் “கல்வெட்டுகள் 3டி டிஜிட்டல் பாதுகாப்புத் திட்ட”த்தின் பி.எல்.உதயகுமார் கூறுகையில், இது மொழிவாரி எல்லைகள் என்ற கருத்துக்கு முந்தைய காலத்துக்குச் செல்கிறது. அப்போது ஒரு குறிப்பிட்ட பகுதியில் எந்த மொழிகள் பேசப்படும் என்பது மிகவும் கலவையாக இருந்தது.
சோழர்களை தமிழ் அரசர்கள் அல்லது ஹொய் சாலர்கள் கன்னடத்துடன் தொடர்புடையவர்கள் என்று பாமர மக்கள் பொதுவாக நினைக்கும் அதே வேளையில், அடிப்படை உண்மைகள் மிகவும் சிக்கலானவை என்றும் உதயகுமார் சுட்டிக் காட்டுகிறார். உதாரணமாக, சோழர் காலத்துடன் ஒப்பிடும்போது ஹொய்சாலர் காலத்து தமிழ் கல்வெட்டுகள் அதிகம் என்று அவர் மேலும் கூறுகிறார்.
அதேபோல, நவீன தமிழ்நாட்டுடன் தொடர்புடைய பகுதிகளில் கன்னடத்தின் பயன்பாடு பொதுவாக இருந்திருக்கும்.
தற்கால பெங்களூருவின் பொது சுற்றுப்புறத்தில் உள்ள தமிழ் கல்வெட்டுகளின் வரலாறு, ராஜ ராஜ சோழனின் ஆட்சியின் போது கி.பி. 1007 வரை செல்கிறது. இருப்பினும் அவருடன் தனிப்பட்ட முறையில் தொடர்பு இல்லை. உண்மையில், பெங்களூரு நகரத்தில் காணப்படும் 1,500 கல்வெட்டுகளில், ஒன்று மட்டுமே அந்த மன்னருடன் நேரடியாக தொடர்புடையது – டோம்லூரில் உள்ள சொக்கநாதசுவாமி கோயிலில் உள்ள ஹொய்சால வம்சத்தின் கடைசி பெரிய அரசராக வரலாற்றாசிரியர்கள் கருதும் மூன்றாம் வீர பல்லாலா-வின் தமிழ் கல்வெட்டு ஆகும்.
இருப்பினும், இந்தக் கல்வெட்டு, நவீன மலூர்பட்னாவிற்கு அருகில் வசிப்பவர்களால் வைக்கப்பட்டுள்ள பெரும்பாலான கல்வெட்டு களைப் போலவே உள்ளது – இது ஒரு கண்டராதித் தனுக்கு உரியது. அனேகமாக, கிராம சபையின் உறுப்பினராக இருக்கலாம். அர்ச்சகர்களுக்குப் போகப் பங்குடன், ஒரு குறிப்பிட்ட தெய்வத்திற்கு நித்தியமாக அரிசி பிரசாதம் வழங்கப்படுவதை உறுதி செய்வதற்காக, நிலங்களை வழங்குவதை நினைவுகூரும் வகையில் இது அமைக்கப்பட்டதாகத் தெரிகிறது.
இருப்பினும், தமிழ் மற்றும் கன்னட கல்வெட்டுகள் வடிவத்திலும் செயல்பாட்டிலும் ஒரே மாதிரியானவை எனக் கூறும் உதய குமார், “வேறு மொழியைப் பயன்படுத்துவதால் மட்டும் அவர்கள் மாறுவதில்லை. இயல்பும் விவரிப்பும் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ ஒத்திருக்கிறது.” என்று கூறுகிறார்.
தமிழில் உள்ள கல்வெட்டுகள் இரண்டு வெவ்வேறு எழுத்துகளில் காணப்படுகின்றன – அக்காலத்தின் தரமான தமிழ் எழுத்து மற்றும் கிரந்த எழுத்து, செதுக்குபவர் கன்னடம் மற்றும் சமஸ்கிருத சொற்றொடர்கள் அல்லது பெயர்களைப் பொறிப்பதில் துல்லியமாக இணைக்க உதவுகிறது. சில அரிய பொறிப்புகள் கன்னடம் மற்றும் தமிழ் எழுத்துக்களைக் கொண்டுள்ளன.
இந்த பரந்த பல்வேறு கல்வெட்டுகளில், அவற்றின் வரலாற்று மதிப்பைப் பற்றி பேசுவது கடினம், ஆனால், சில பெங்களூருவின் கண்ணோட் டத்தில் குறிப்பாக ஆர்வமாக உள்ளன. உதய குமார், விபூதிபுராவில் உள்ள கல்வெட்டு ஒன்றின் உதாரணத்தை மேற்கோள் காட்டுகிறார், இது ஒரு காலத்தில் வச்சிதேவர்புரம் என்று அழைக் கப்பட்ட கட்டடத்தை பதிவு செய்கிறது. இது அப்பகுதியின் கண்காணிப்பாளர் நின்றான் மற்றும் கணக்காளர் பெரியபிள்ளை ஆகியோரால் கையொப்ப மிடப்பட்டது.
அவர் கூறுகிறார், “இது ஒரு கிராமத்தை கட்டியெழுப்பியதை ஆவணப்படுத்தும் ஒரு அழகான கல்வெட்டு. காடுகளை அழித்தல், வீடுகள் கட்டுதல், ஏரி அமைத்தல், ஊர் பெயர் சூட்டுதல் போன்றவற்றை விவரிக்கிறது. மிக அரிதாகவே ஒரு இடத்தைக் கட்டியமைக்கும் இத்தகைய வெளிப்படையான பதிவுகள் கிடைக்கின்றன.” என்று உதய குமார் கூறுகிறார்.