ஹிண்டன்பர்க் அறிக்கை எதிரொலி: ஒரே நாளில் ரூ.53,000 கோடி இழப்பு!

2 Min Read

புதுடில்லி, ஆக.13 பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பரான அதானி தனது நிறுவனங்கள் மூலம் பங்குச் சந்தை மற்றும் வெளிநாட்டு முதலீடுகளில் பல்வேறு முறைகேடுகள் செய்த தாக அமெரிக்காவைச் சேர்ந்த பங்குச்சந்தை ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் கடந்த 2023 ஜனவரி மாதம் அறிக்கை வெளியிட்டது.
இந்த முறைகேடு விவகாரத்தை விசாரிக்க வேண்டிய பங்குச் சந்தை ஒழுங்குமுறை ஆணையமான செபி, உரிய விசாரணை நடத்தாமல், அதானிக்கு ஆதரவாக செயல்பட்டதாக ஏற்கெனவே குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இந்தக் குற்றச்சாட்டு உண்மை என ஹிண்டன்பர்க் நிறுவனம் ஆகஸ்ட் 10 அன்று இரவு தனது 2 ஆவது அறிக்கையை வெளியிட்டது.
அந்த அறிக்கையில்,‘‘அதானி மீதான முறைகேட்டை விசாரிக்காமல் இருக்கவும், இதற்குக் கைமாறாக தனது பங்குகளை செபியின் தலைவர் மாதவி புச்சிற்கு அதானி வாரி வழங்கியது” என பல்வேறு தகவல் களை அறிக்கையில் குறிப்பிட்டுள் ளது ஹிண்டன்பர்க் நிறுவனம். அதாவது அதானி தனது முறைகேடு களை மறைக்க மேலும் பல முறை கேடுகளை அரங்கேற்றியதாக ஹிண் டன்பர்க் நிறுவனம் தனது அறிக்கை யில் குற்றம் சாட்டியுள்ளது.

இந்நிலையில், ஹிண்டன்பர்க் நிறுவ னத்தின் முதல் அறிக்கையில் நிகழ்ந்தது போல, இரண்டாவது அறிக்கையிலும் அதா னியின் பங்குகள் ஆட்டம் கண்டு வரு கின்றன. ஹிண்டன்பர்க் அறிக்கை யால் வாரத்தின் முதல் நாளான திங்களன்று (12.8.2024) இந்திய பங்குச்சந்தை வர்த்தகம் சரிவுடன் தொடங்கியது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 409 புள்ளி கள் சரிந்து 79,296 புள்ளிகளுடனும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிப்டி 47 புள்ளிகள் குறைந்து 24,320 புள்ளிகளுடனும் வர்த்தகம் நடைபெற்றது. குறிப்பாக அதானி குழுமத்தின் அனைத்து நிறுவன பங்குகளும் சரிவுடன் தொடங்கியுள்ள நிலையில், அதானி என்டர்பிரைசஸ், அதானி போர்ட்ஸ், அதானி பவர், அதானி என்ர்ஜி உள்ளிட்ட பங்குகளின் விலைகள் கடும் சரிவை கண்டது. அதாவது சுமார் 7% வரை அதானி குழும பங்குகள் சரிவை சந்தித்தன. அதானி குழுமத்தின் 10 நிறுவனங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சுமார் 53 ஆயிரம் கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

(மதியம் 3 மணி நிலவரம்)
எனினும் மாலை நேர நிலவரப் படி அதானியின் பங்குகள் லேசாக சரிவிலிருந்து மீண்டதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல் வெளியாகியது.
அதானியுடன் தொடர்பு இல்லை என்றால் செபியின் டுவிட்டர் ‘எக்ஸ்’ கணக்கை நிறுத்தியது ஏன்?
செபி தலைவர் மாதவியுடன் எந்தத் தொடர் ்பும் இல்லை என அதானி குழுமமும், அதானியின் வெளிநாட்டு பங்குகளுக் கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என மாத வியும் ஹிண்டர்பர்க் அறிக்கைக்கு விளக்கம் அளித்த னர். “இருதரப்புக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை என்றால் ஏன் செபியின் டுவிட்டர் ‘எக்ஸ்’ கணக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது?” என காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *