புது டில்லி, ஆக. 8- தொழிலதிபா் முகேஷ் அம்பானி இல்லத் திருமண நிகழ்ச்சியில் காங்கிரஸ் பொதுச் செயலா் பிரியங்கா வதேரா பங்கேற்கவில்லை என்று அக்கட்சி விளக்க மளித்துள்ளது.
முகேஷ் அம்பானி மகன் அனந்த் அம்பானியின் திருமணம் அண் மையில் வெகு பிரமாண்டமாக நடத்தப்பட்டது. இதில் பன்னாட்டு அளவிலான பிர பலங்கள் முதல் அரசியல் தலைவா்கள், திரைப்படத் துறை பிரபலங்கள் வரை பலரும் பங்கேற்றனா். இந்நிலையில், இந்த திருமண நிகழ்ச்சியில் காங்கிரஸ் பொதுச் செயலா் பிரியங்கா வதேரா பங்கேற்றார் என்று பாஜக மக்களவை உறுப்பினர் நிஷிகாந்த் துபே மக்களவையில் தெரிவித்தார்.
இந்நிலையில் இதற்கு மறுப்புத் தெரிவித்து காங்கிரஸ் மூத்த தலைவா் சுப்ரியா சிறீநாத் ‘எக்ஸ்’ வலைதளத்தில் வெளியிட்ட பதிவில்,
‘மக்களவையில் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர். ஒருவா், பிரியங்கா குறித்து தவறான தகவலைத் தெரிவித்துள்ளார். அம்பானி இல்லத் திருமணத்தில் பிரியங்கா பங்கேற்றார் என்பது அப்பட்டமான பொய். ஏனெனில், அவா் குறிப்பிடும் நாளில் பிரியங்கா இந்தியாவில் இல்லை, வெளிநாட்டுக்குப் பயணம் மேற்கொண்டிருந்தார். அனைவரையும் ‘கண்காணிக்கும்’ உள்துறை அமைச்சகத்துக்கும் இந்த விஷயம் தெரிந்திருக்கும். நாடாளுமன்ற உறுப்பினராக இல்லாத ஒருவா் குறித்து அவையில் பொய்யான தகவல்களைப் பேசுவதும் நாடாளுமன்ற உரிமை மீறல்தான்’ என்று பதிவிட்டுள்ளார்.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சோனியா காந்தி ஆகியோரும் அம்பானி இல்லத் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.