திருவனந்தபுரம். ஆக. 8- வயநாட்டில் நிலச் சரிவி னால் பாதிக்கப்பட்ட கிராமங்களில் மீட் புப் பணிகளை மேற் கொள்வதில் கேரள சமூகம் ஒற்றுமையை வெளிப்படுத்தியதாக மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் 6.8.2024 அன்று பாராட்டினார்.
‘வயநாடு நிலச்சரிவு பேரழிவு மாநில வரலாற்றில் மிகப்பெரிய சோகம்’ என்றும் அவா் விவரித்தார்.
கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் பலத்த மழையைத் தொடா்ந்து கடந்த ஜூலை 30-ஆம் தேதி பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் பெரிதும் பாதிக்கப்பட்ட முண்டக்கை, சூரல்மலை ஆகிய மலைக் கிராமங் களைச் சோ்ந்த நூற்றுக் கணக்கானோர் உயிரிழந்தனா்.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் இன்னும் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் தொடா்ந்து வருகின்றன.
இந்நிலையில், திருவனந்தபுரத்தில் புதிதாக பணியில் சோ்ந்த காவலா்களை வரவேற்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய முதலமைச்சர் பினராயி விஜயன், ‘நமது மாநிலத்தின் புகழ்பெற்ற கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில், அனைத்து வேறுபாடுகளையும் கடந்து வயநாட்டில் மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தப் பணியில் காவல்துறை முக்கியப் பங்காற்றுகிறது.
கேரளம் தனது வரலாற்றில் இவ்வளவு பெரிய சோகத்தை எதிர்கொண்டதில்லை. இது உலகம் முழுவதும் உள்ள மக்களின் இத யங்களில் வலியை ஏற் படுத்தியுள்ளது’ என்றார்.
மீட்கப்படாதோர் பட்டியல்
வயநாடு நிலச்சரிவில் காணாமல் போய் இன்னும் மீட்கப்படாதவா்களின் விவரங்கள் அடங்கிய பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என மாநில வருவாய்த் துறை அமைச்சா் கே.ராஜன் தெரிவித்தார்.
மேலும், ‘பாதிக்கப்பட்ட அனைவருக்கும் விரிவான மறுவாழ்வு வழங்குவதே அரசின் நோக்கமாகும். பேரிடரால் ஏற்பட்ட சேதம் மற்றும் இழப்புகள் குறித்து விரைவில் கணக்கெடுப்பு நடத்தப்படும்’ என்றும் அவா் கூறினார்.
நிலச்சரிவு பாதிப்புப் பகுதிகளில் செயல்பட்டு வந்த பள்ளிகளில் அடுத்த 10-20 நாள்களில் வகுப்புகள் மீண்டும் தொடங்கப்படும். நிலச்சரிவில் உயிரிழந்த தொழிலாளா்களின் குடும்பத்தினருக்கும் காயமடைந்த தொழிலா ளா்களுக்கும் நிதியுதவி வழங்கப்படும் என்று என மாநில கல்வி மற் றும் தொழில்துறை அமைச்சா் வி.சிவன்குட்டி தெரி வித்தார்.