வக்ஃபு வாரிய சட்டத்திருத்தம் : எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

2 Min Read

புதுடில்லி, ஆக. 7- ஒன்றிய அரசு வக்பு வாரியங்களை நிர்வகிக்கும் சட்டத்தில் (1995) திருத்தம் கொண்டு வர இருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன. அப்படி திருத்தம் கொண்டு வந்தால் இந்த சட்டத்திற்காக திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் எதிர்ப்போம் என பல எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள வக்பு வாரியங்களுக்கு சொந்தமான சொத்துகள் மூலம் வருடத்திற்கு சுமார் 200 கோடி ரூபாய் கிடைப்பதாக கூறப்படுகிறது. ஆனால் சொத்து மதிப்புகளை வைத்து பார்க்கும்போது இந்த தொகை குறைவு எனக் கூறப்படுகிறது.

அதிக பொறுப்பு மற்றும் வெளிப் படத்தன்மை, பெண்களுக்கு வாரியத் தில் இடத்தை உறுதி செய்வது உள் ளிட்ட திருத்தங்களை சட்ட திருத்த மசோதாவில் ஒன்றிய அரசு கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. முஸ்லிம் சமூகத்தில் இருந்து வரும் கோரிக்கைகளின் பின்னணியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு கூறுகிறது.
சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் “ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தில் கொண்டு வரும் சட்ட திருத்த மசோ தாவை நாங்கள் எதிர்ப்போம். முஸ்லிம் களின் உரிமைகளை பறிக்க பாஜக முயற்சிக்கிறது. இந்துக்கள், முஸ்லிம்கள் என பிரிக்கும் வேலையை மட்டுமே பாஜக செய்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.

அரசின் இந்த நடவடிக்கை தவறான நோக்கம் கொண்டது என அய்யுஎம்எல்-இன் இ.டி. முகமது பாஷீர் தெரிவித்துள்ளார். மேலும் “இது தொடர்பாக சட்டம் கொண்டு வரப் பட்டால் நாங்கள் கடும் எதிர்ப்பை தெரிவிப்போம். எதிர்க்கும் மனநிலை கொண்ட கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவோம்” என்றார்.
சிவசேனா (உத்தவ் தாக்கரே) கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பிரியங்கா சதுர்வேதி “பாஜக தலைமையிலான அரசு பட்ஜெட் மீதான விவாதத்தில் இருந்து தப்பிக்க விரும்புகிறது, எனவே அவர்கள் வக்ஃப் பிரச்சினையை கொண்டு வந்துள்ளனர். நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் வரை நான் இது குறித்து கருத்து தெரிவிக்கமாட்டேன்” என்றார்
சிபிஅய் (எம்) நாடாளுமன்ற உறுப் பினர் அம்ரா ராம் “வக்பு வாரியங்களை வலிமைப்படுத்துவதற்குப் பதிலாக பிரித்தாளும் அரசியலை பாஜக நம்பு கிறது. அதில் தலையிட முயற்சி செய்து வருகிறார்கள்” என்றார்.
“தேசிய ஜனநாயக கூட்டணி அரசு வக்பு வாரியத்தின் சுயாட்சியை பறிக்க விரும்புகிறது” என ஒவைசி அசாதுதீன் விமர்சித்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *