திருவனந்தபுரம், ஆக. 4- எங்கள் குடும்பத்தில் ஒருவர் ராகுல் காந்தி என – பா.ஜ.க.வினர் பொய்யாக பரப்பிய காணொலிக்கு கேரள இளைஞர் பதிலடி கொடுத்துள்ளார்.
கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் வயநாடு பகுதியில் உள்ள சூரல் மலை, மேப்பாடி, முண்டகை ஆகிய பகுதிகளில் கடந்த 30ஆம் தேதி அதிகாலை மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது.
இந்த நிலச்சரிவில் 344 பேர் உயிரிழந்துள்ளனர். 200க்கும் மேற்பட்ட வீடுகள் நிலச்சரிவில் முற்றிலுமாக இடிந்து தரைமட்டமாயின. மேலும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதுகாப்பா காந்தி சென்ற வாகனத்தை நிறுத்தி இளைஞர் ஒருவர், நிலச்சரிவின் பாதிப்புகள் குறித்து விளக்கினார். ஆனால் இதை பா.ஜ.க.வினர் ராகுல் காந்தியை இளைஞர் ஒருவர் தடுத்து நிறுத்தியதாக போலியாக காணொலிகளை இணையத்தில் வைரலாக்கினர்.
இதனைத் தொடர்ந்து அந்த இளைஞர் ரெஜினாஸ், என்ன நடந்தது என்பதை விளக்கி சமூகவலைதளத்தில் காணொலி வெளியிட்டுள்ளார். அதில், ”நான் ராகுல் காந்தியை தடுத்து நிறுத்தவில்லை. அவர் எங்கள் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் மட்டுமல்ல, எங்கள் குடும்பத்தில் ஒருவர். நான் அவரிடம் நிலைமையை விளக்கினேன். இதை பா.ஜ.கவினர், நான் அவரை தடுத்து நிறுத்தியதாக பொய்யாகத் திரிக்கின்றனர்.” என கூறியுள்ளார்.
”எங்கள் குடும்பத்தில் ஒருவர் ராகுல் காந்தி” பா.ஜ.க.வினருக்கு கேரள இளைஞர் பதிலடி!

Leave a Comment