உணவு வழங்கும் விவசாயிகளின் உணர்வுகளை காயப்படுத்தவேண்டாம் ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

புதுடில்லி, ஆக. 4- பஞ்சாப் மற்றும் அரியானா எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் உணா்வு களை காயப்படுத்த வேண்டாம் என்று உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டபூா்வ உத்தரவாதம் அளிக்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை ஒன்றிய அரசு நிறைவேற்ற வலியுறுத்தி, சம்யுக்த கிசான் மோர்ச்சா, கிசான் மஸ்தூா் மோர்ச்சா விவசாய கூட்டமைப்புகள் சார்பாக ‘டில்லி செல்வோம்’ போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதையொட்டி, பஞ்சாப் மற்றும் அரியானா எல்லைப் பகுதிகளான ஷம்பு மற்றும் கனெளரியில் விவசாயிகள் திரண்டுள்ளனா். கடந்த பிப்.13ஆம் தேதிமுதல் விவசாயிகள் அங்கு தங்கியுள்ள நிலையில், அவா்கள் டில்லிக்குள் நுழையாத வகையில், எல்லை சாலைகளில் அரியானா அரசு தடுப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், ஷம்பு எல்லையில் உள்ள தடுப்புகளை அகற்றுமாறு அரியானா அரசுக்கு பஞ்சாப் மற்றும் அரியானா உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அரியானா அரசு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது.

இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூா்ய காந்த், ஆா்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமா்வு முன்பாக 2.8.2024 அன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறுகையில், ‘விவசாயிகளின் உணா்வுகளை காயப்படுத்த வேண்டாம். அவா் களின் போராட்ட விவகாரத்தில் தற்போதைய சூழலை எவரும் மோசமாக்கக் கூடாது.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு சுதந்திரமான குழுவை அமைக்கும் வகையில், சில நடுநிலையான நபா்களின் பெயா் களை பஞ்சாப் மற்றும் அரியானா அரசுகள் பரிந்துரைக்க வேண்டும்.

விவசாயிகளின் பிரச்சினைகளை புரிந்துகொள்ளும் வேளாண் விஞ்ஞானிகள், பொருளாதார அறிஞா்கள், வேளாண் பல்கலைக் கழகங்களைச் சோ்ந்த பேராசிரியா்கள் உள்ளனா். இதேபோல விவசாய பின்னணி கொண்ட மேனாள் நீதிபதிகளும் இருக்கக் கூடும். அவா்களுக்கும் விவசாயி களின் பிரச்சினைகள் குறித்து சிறிது தெரிந்திருக்கலாம். இதுபோன்ற சில நடுநிலையான நபா்களின் பெயா்களை பரிந்துரைக்கலாம்’ என்று தெரிவித்தது. இந்த வழக்கின் அடுத்த விசாரணை ஆகஸ்ட் 12-க்கு ஒத்திவைக்கப்பட்டது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *