கடந்த 5 ஆண்டுகளில் 4.43 கோடி ஊரக வேலைவாய்ப்புத் திட்ட அட்டைகள் நீக்கம் ஒன்றிய அரசு தகவல்

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

புதுடில்லி, ஆக 3 கடந்த 5 ஆண்டுகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட 4.43 கோடி அட்டைகளை நீக்கியதாக ஒன்றிய அரசு தெரிவித்தது.

இதுதொடா்பாக மாநிலங்களவையில் கேட்கப் பட்ட கேள்விக்கு ஒன்றிய ஊரக மேம்பாட்டுத்துறை இணையமைச்சா் கமலேஷ் பாஸ்வான் அளித்த எழுத்துபூா்வமான பதிலில், ‘வேலைவாய்ப்பு அட்டைகளை சரிபார்க்கும் பணிகளை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தொடா்ந்து மேற் கொண்டு வருகின்றன. வேலை செய்ய தயாராக இல்லாத குடும்பங்கள், கிராமங்களை விட்டு முழுவதுமாக வெளியேறிய குடும்பங்கள் உள்பட பல்வேறு விதிகளின்கீழ் போலியான அடையாள அட்டைகள் கண்டறியப்படுகின்றன. அதன்பின்னா் அந்த அட்டைகளை நீக்கம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் கடந்த 2019-2020 நிதியாண்டில் 14.33 லட்சம் வேலைவாய்ப்பு அட்டைகளும் 2020-2021 நிதியாண்டில் 27.92 லட்சம் அட்டைகளும் 2021-2022 நிதியாண்டில் 50.39 லட்சம் அட்டைகளும் 2022-2023 நிதியாண்டில் 2.25 கோடி அட்டைகளும் 2023-2024 நிதியாண்டில் 1.02 கோடி நீக்கப்பட்டுள்ளன.

மாநிலங்கள் வாரியாக…: பீகார் மாநிலத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின்கீழ் வழங்கப்பட்ட 99.26 லட்சம் போலி அட்டைகளும், உத்தரப் பிரதேசத்தில் 91.42 லட்சம் அட்டைகளும், ஒடிசா மாநிலத்தில் 42.82 லட்சம், மேற்கு வங்கத்தில் 24.05 லட்சம், மத்திய பிரதேசத்தில் 37 லட்சம், ஆந்திர பிரதேசத்தில் 35 லட்சம், ஜார்க்கண்டில் 17 லட்சம் அட்டைகளும் நீக்கப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டது.

14 கோடி அட்டைகள் விநியோகம்: இதே திட்டத் தின்கீழ் மொத்தமாக14.23 கோடி வேலைவாய்ப்பு அட்டைகள் வழங்கப்பட்டு 24.77 கோடி போ் பணியில் உள்ளதாக ஊரக வளா்ச்சித்துறை அமைச்சகத்தின் வலைதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் அவற்றில் 13.11 கோடி பணியாளா்களை உள்ளடக்கிய 9.1 கோடி அட்டைகள் மட்டுமே செயல் பாட்டில் இருப்பதாகவும் வலைதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *