புதுடில்லி. ஆக. 3- புதுடில்லி யில் தமிழ்நாடு மற்றும் பாண்டிச் சேரி வழக்குரைஞர்கள் சங்கங் களின் கூட்டுக் குழுவின் சார்பில் மூன்று குற்றவியல் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி புதுடில்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடைபெற்றது. இதில் 2000த்திற்கும் மேற்பட்ட வழக்குரைஞர்கள் தமிழ்நாட்டிலிருந்து சென்று பங் கேற்றனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் களான திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ. இராசா, விடு தலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், மதிமுக முதன்மைச் செயலாளர் துரைவைகோ, காங்கிரஸ் ஜோதிமணி, ஈரோடு பிரகாஷ், பெரம்பலூர் அருண் நேரு, தஞ் சாவூர் முரசொலி, மயிலாடுதுறை சுதா, சிவகங்கை கார்த்திக் சிதம் பரம், திருநெல்வேலி இராபர்ட் புரூஸ், கன்னியாகுமரி விஜய் வசந்த், கோவை கணபதி ராஜ்குமார் உள்ளிட்டோர் ஆர்ப் பாட்டத்தில் பங்கேற்று வாழ்த்திப் பேசினர்.
போராட்டத்தின் முடிவில் வழக்குரைஞர்கள் மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ராகுல்காந்தியை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அப்போது வழக்குரைஞர்கள் பெரியார் மண்ணிலிருந்து வருகிறோம் என்று குறிப்பிட்டார்கள்.
மிகுந்த மகிழ்ச்சியுடன் மனுவைப் பெற்றுக் கொண்ட ராகுல்காந்தி மூன்று சட்டங்களையும் திரும்பப் பெற்றிட நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பதாக உறுதி அளித்தார்.
மனுவை வழங்கிய போராட்டக் குழுவில் வழக்குரைஞர் ஆ.பாண்டியன் மற்றும் கோபி மாவட்ட கழக செயலாளர் வழக்குரைஞர் நம்பியூர் மு.சென்னியப்பனும் கலந்து கொண்டனர்.