2.8.2024
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* டார்வின் பரிணாமக் கோட்பாட்டை பாட நூல்களில் இருந்து நீக்கிய என்.சி.இ.ஆர்.டி. குறித்து எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் கடும் கண்டனம்.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* கல்வி, வேலைவாய்ப்பில் எஸ்சி, எஸ்டி.க்கு உள் ஒதுக்கீடு செல்லும்:
* அருந்ததியர் உட்பட எஸ்சி, எஸ்டி பிரிவில் உள் இட ஒதுக்கீடு வழங்கலாம்; மாநிலங்களுக்கே அதிகாரம் என உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு அதிரடி தீர்ப்பு
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* பேரதிர்ச்சி! “ரூ.971 கோடி” புதிய நாடாளுமன்றத்துக்குள் கொட்டும் மழை நீர்! பக்கெட்டில் பிடிக்கும் அவலம்! மோடி ஆட்சியில் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு; இப்போது புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் கசிவு. புதிய நாடாளுமன்ற கட்டடத்தை ஆய்வு செய்ய காங்கிரஸ் சார்பில் ஒத்திவைப்பு தீர்மானம் தாக்கீது.
* வேண்டாம் இந்தியக் குடியுரிமை: 2023இல் 2.1 லட்சத்துக்கும் அதிகமான இந்தியர்கள் இந்திய குடியுரிமை வேண்டாம் என வெளியேறி உள்ளனர், வெளியுறவுத்துறை இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் நாடாளுமன்றத்தில் பதில்
தி இந்து:
* கோடிக்கணக்கான இளைஞர்கள் வேலை தேடுவதில் தங்களுடைய அவலநிலைக்கு நிரந்தர தீர்வு காண விரும்புகிறார்கள், ஆனால் நரேந்திர மோடி அரசாங்கம் ஒரு தற்காலிக தீர்வைக் கூட வழங்காமல், வேலை ஊக்க திட்டம் என கூறுகிறது, மல்லிகார்ஜூனா கார்கே காட்டம்.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* உச்ச நீதிமன்றத் தீர்ப்பு, ஒன்றிய அரசுக்கு இழுபறியான பிரச்சினையை எழுப்பியுள்ளது. சட்டமன்றத் தேர்தலின் போது தெலங்கானாவில் மாதிகா ஆர்வலர்களுடன் மேடையை பகிர்ந்து கொண்டதன் மூலம் ஒன்றிய அளவில் எஸ்.சி-களை துணைப் பிரிவு படுத்துவது குறித்த தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயம் மோடி அரசுக்கு ஏற்பட்டுள்ளது.
– குடந்தை கருணா