டெக்கான் கிரானிக்கல், சென்னை
ராகுல் காந்தியின் ஜாதி குறித்த சர்ச்சை பேச்சை பகிர்ந்த பிரதமர் மோடிக்கு எதிராக உரிமை மீறல் தாக்கீது.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்
விமான சட்டத்திற்கு பாரதிய வாயுயான் விதேயக் என ஹிந்தி மொழியில் பெயரிடப்பட்டிருப்பதற்கு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு.
ஆயுள், மருத்துவ காப்பீடு மீதான 18 சதவீத வரியை திரும்ப பெற வேண்டும்: அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு நிதின் கட்கரி கடிதம்.
மக்கள் ஆதரவு நமக்கு உள்ளது; அதை நீர்த்து விடாமல் முன்னெடுத்துச் செல்லுங்கள் – காங்கிரஸ் கட்சியினருக்கு சோனியா அறிவுரை.
யு.பி.எஸ்.சி. தேர்வில் மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள பூஜா கெட்கரின் அய்.ஏ.எஸ். தெரிவினை ரத்து செய்து யு.பி.எஸ்.சி. உத்தரவு.
இந்தியன் எக்ஸ்பிரஸ்
சித்தராமையாவுக்கு எதிரான பாஜக நடை பயணத்திற்கு ஆதரவு இல்லை: ஒன்றிய அமைச்சர் குமாரசாமி அதிரடி.
டைம்ஸ் ஆப் இந்தியா
குஜராத் அதிசயம்: நீட் தேர்வில் 705/720. ஆனால், பன்னிரண்டாம் வகுப்பு வேதியியல் பாடத்தில் தோல்வி; மேலும் துணைப் பாடத்திலும் தோல்வி.
மாணவிகளுக்கு வழங்குவது போல, கல்லூரிகளில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் மாதந்தோறும் ரூ.1,000 அளிக்கும் ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டத்தை ஆகஸ்ட் 9ஆம் தேதி கோவையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
.- குடந்தை கருணா